குமரிக் கடல் பகுதியில் நிலவும் காற்ற ழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 48 மணி  நேரத்தில் புயலாக மாறக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி யுள்ளது. இதனால் தமிழகத்தின் 22 மாவட்  டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன், நுங்கம்பாக்கம் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “குமரிக் கடல் பகுதியில் நிலவும் காற்ற ழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழ கத்தில் தெற்கு, டெல்டா மற்றும் மேற்குத்  தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்க ளில் ஓரிரு இடங்களில் கன மற்றும் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது” என்றார். குமரிக் கடல் பகுதியில் நிலவும் காற்ற ழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் பட்சத்தில் அதற்கு ‘மஹா’ என்று பெயர்  சூட்டப்படும் என பாலச்சந்திரன் குறிப்பிட்டார். ஓமன் நாட்டின் சார்பில் இந்தப்  பெயர் சூட்டப்படுகிறது என்று கூறிய அவர்,  இந்தப் புயலால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் அவர் தெரி வித்தார். வடகிழக்கு பருவமழையை பொருத்த வரை இந்த மாதம் 20 செ.மீ. பெய்துள்ள தாகவும், இது வழக்கத்தை விட 14 விழுக்காடு அதிகம் என்றும் தெரிவித்தார். 

அதிகன மழை

கன்னியாகுமரி கடல் பகுதியில் நிலை  கொண்டிருந்த வலுவான காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு மண்டல மாக மாறியுள்ளதால் தமிழ்நாட்டில், அடுத்த 2 நாட்களுக்கு கனமழை முதல் அதி கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக, இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மாலத்தீவின் மாலேவிலிருத்து, கிழக்கு-வடகிழக்கில் 390 கிலோ மீட்டர் தொலைவி லும், லட்சத்தீவின் மினிகாய் பகுதியி லிருந்து கிழக்கு-தென்கிழக்கில் 390  கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில்,  வடமேற்கு பகுதியை நோக்கி நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி கடல் பகுதியில் உரு வெடுத்துள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், தமிழ்நாட்டின் பெரும்பா லான பகுதிகளில், அடுத்த 2 நாட்களுக்கு, கனமழை முதல் அதிகனமழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

BSNL Employees Union Nagercoil