முன்னணி தொலை தொடர்பு நிறுவனமான வோடஃபோன் இந்தியாவை விட்டு வெளி யேற இருப்பதாக தகவல்கள் வெளிவருகின்றன.
இங்கிலாந்தை சேர்ந்த வோடஃபோன் நிறுவனம் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் செயல் பட்டு வந்தது. கடந்த சில ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கி வந்த வோடஃபோன், சென்ற ஆண்டு ஐடியா நிறுவனத்துடன் இணைந்தது. அதன்பிறகும் அந்நிறுவனம் தொடர்ச்சியாக கடும் நஷ்டத்தை சந்தித்து வருகிறது.
இந்நிலையில் வோட ஃபோன் இந்தியாவை விட்டு வெளியேற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் அந்நிறுவனம் வெளியிடவில்லை.

BSNL Employees Union Nagercoil