அக்டோபர் மாதச் சம்பளம் நவம்பர் 04 ஆம் தேதி ஆகியும் இன்று வரை வழங்கப்படவில்லை. 2019 செப்டம்பருக்கான சம்பளம் இரண்டு வாரங்களுக்கு முன்புதான் வழங்கப்பட்டது என்றும் அக்டோபர் சம்பளத்தை உடனடியாக வழங்குவதற்கான அவசரம் இல்லை என்றும் நிர்வாகம் மனநிறைவுடன் இருப்பதாக தெரிகிறது. பி.எஸ்.என்.எல் ஊழியர்களின் சம்பள வழங்கல் சரியான நேரத்தில் நடைபெறவில்லை, இது BSNL ன் நம்பகத்தன்மையை சேதப்படுத்துகிறது. இதை வைத்துக்கொண்டு மீண்டும் மீண்டும் செய்தி ஊடகங்கள் சந்தைக்கு தவறான செய்தியை அனுப்புகிறது என்று தெரிவிக்கின்றன. 2019 அக்டோபர் மாதத்திற்கான சம்பளத்தை உடனடியாக வழங்கக் கோரி BSNLEU சார்பாக CMDக்கு கடிதம் எழுதியுள்ளது.

BSNL Employees Union Nagercoil