முதலாளிக்கும் தொழிலாளிக்கும் இடையிலான உறவை விருப்ப ஓய்வு திட்டம் முழுமையாக துண்டித்து விடும் – எனவே விருப்ப ஓய்வு திட்டத்தில் சென்ற தொழிலாளி முன் தேதியிட்டு வழங்கப்படும் ஊதிய மாற்றத்திற்கு தகுதியானவர் அல்ல,
விருப்ப ஓய்வு திட்டத்தில் செல்லும் ஊழியர்கள் ஊதிய மாற்றத்திற்கு தகுதியானவர்களா என்ற கேள்வியை சில தோழர்கள் எழுப்புகின்றனர்.  சஞ்சய் பிகாரி மற்றும் IFCL இடையிலான வழக்கில் 26.02.2017 அன்று டெல்லி உயர் நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பில், ‘ஒருவர் சேவையில் இருந்த காலத்தில், முன் தேதியிட்டு வழங்கப்படும் ஊதிய மாற்றத்திற்கு, விருப்ப ஓய்வு திட்டத்தில் சென்ற ஊழியர் தகுதி பெற மாட்டார் என கூறப்பட்டுள்ளது.  அந்த தீர்ப்பில் இது தொடர்பாக எழுதப்பட்ட பகுதி கீழே கொடுக்கப்பட்டுள்ளது:-

“இது (விருப்ப ஓய்வு திட்டம்) கொடுப்பதும், எடுப்பதுமான ஒருங்கிணைந்த உடன்பாடு.  அதனால் தான் வியாபார உலகில் அதனை ‘தங்க கை குலுக்கல்’ என அறியப்படுகிறது.  முதலாளிக்கும், தொழிலாளிக்குமான சட்டபூர்வ உறவை முழுமையாக துண்டிப்பதற்காகவே இந்த தொகை வழங்கப்படுகிறது.  அந்த பணம் வழங்கப்பட்டு, அந்த நிறுவனத்தில் பணியாற்றுவது முடிவடைந்த பின்னர், அவர் தனது உரிமைகள் அனைத்தையும் விட்டு விடுகிறார்.  அதனால், முந்தைய காலத்திற்கு உயர்த்தப்பட்ட ஊதிய விகிதம் உட்பட எந்த உரிமையையும் பெற போராடுவது என்ற கேள்விக்கே இடமில்லை”

BSNL Employees Union Nagercoil