புதுதில்லி, நவ.9- அசிம் பிரேம்ஜி பல்கலைக் கழ கத்தின் ‘நிலையான வேலை வாய்ப்புக்கான மையம்’, அண்மை யில் ‘இந்தியாவின் வேலை வாய்ப்புப் பிரச்சனை’என்ற தலைப்பிலான அறிக்கையில், வேலை உருவாக்கம், வேலை யின்மை குறித்த விவரங்களை வெளி யிட்டிருந்தது. பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, 2011-12 ஆம் ஆண்டில் 47.4 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக் கப்பட்டு இருந்ததாகவும், ஆனால், மோடி ஆட்சிக்கு வந்தபின்பு, 2017-18ஆம் ஆண்டில் மொத்தம் 46.5 கோடி வேலைவாய்ப்புகள் மட்டுமே உருவாக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதாவது 5 ஆண்டுகளில் மட்டும் 90 லட்சம் வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளதாகவும், வரலாற்றி லேயே இந்த அளவிற்கு வேலை உரு வாக்கம் குறைவது இதுவே முதல் முறையாகும் என்றும் குறிப்பிடப் பட்டு இருந்தது. மேலும், பட்டப் படிப்பை முடித்த வர்களின் வேலையின்மை விகிதம் 19.2 சதவிகிதத்திலிருந்து 35.8 சத விகிதமாகவும், தொழில்நுட்ப கல்வி யில் பட்டம் பெற்ற இளைஞர்களின் வேலையின்மை விகிதம் மிக அதிக மாக 37.3 சதவிகிதம் என்று அதி கரித்துள்ளதாகவும் குறிப்பிட்டி ருந்தது.

இந்நிலையில், இந்தியாவில் அதிகரித்துள்ள வேலையின் மைக்கு, ரயில்வே அமைச்சம் வெளி யிட்ட செய்திக்குறிப்பே தற்போது சான்றாகி இருக்கிறது. ரயில்வேயில் காலியாக இருக்கும் 1 லட்சத்து 20 ஆயிரம் பணி யிடங்களுக்கு, சுமார் 2 கோடியே 40 லட்சம் பேர் விண்ணப்பித்து இருப்ப தாக, ரயில்வே அமைச்சக செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது. இந்திய ரயில்வேயில் அசிஸ் டெண்ட் லோகோ பைலட் பிரிவில் 64 ஆயிரத்து 371 காலியிடங்களை யும், டெக்னீசியன் பணிக்கு 63 ஆயி ரத்து 202 காலியிடங்களையும் (குரூப் டி) நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஆண்டு ரயில்வே வெளியிட்டுள்ளது. இதில், 64 ஆயிரத்து 371 அசிஸ் டெண்ட் லோகோ பைலட் வேலை களுக்கு, 47 லட்சத்து 45 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். சரா சரியாக ஒரு பணியிடத்திற்கு 74 பேர் என்ற அடிப்படையில் விண்ணப் பித்துள்ளனர்.

இதேபோல டெக்னீசியன் பிரி வில் காலியாக இருக்கும் 63 ஆயி ரத்து 202 இடங்களுக்கு 1 கோடியே 90 லட்சம் பேர் விண்ணப்பித்து, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர். அதாவது, ஒரு பணியிடத்திற்கு 301 பேர் போட்டியில் இறங்கியுள்ளனர். இந்த காலிப் பணியிடங்களுக் கான தேர்வு, ஜனவரி 21 முதல் ஜன வரி 23 வரையில் மூன்று நாட்கள் நடத்தப்பட்டுள்ளது. இந்த தேர்வில் முறையே 77 சதவிகிதம் மற்றும் 88 சதவிகிதம் பேர் கலந்து கொண் டுள்ளனர். முன்னதாக இதே ரயில்வே நிர்வா கம் 13 ஆயிரத்து 500 ஜூனியர் என்ஜி னியர் பணியிடங்களுக்கான தேர்வை நடத்தியுள்ளனர். இதற்கும் 27 லட்சத்து 75 ஆயிரம் பேர் விண் ணப்பித்துள்ளனர். அதாவது ஒரு பத விக்கு 183 பேர் போட்டியிட்டுள்ளனர். இந்நிலையில், 2 கோடியே 40 லட்சம் விண்ணப்பதாரர்களை கை யாண்ட உலகின் மிகப்பெரிய வேலைவாய்ப்பு துறையாக இந்திய ரயில்வே விளங்குகிறது என்று ரயில்வே பெருமைப்பட்டுள்ளது.

BSNL Employees Union Nagercoil