மாணவர்களின் போராட்டம் வெற்றி

புது தில்லி,நவ.13- மாணவர்களின் தொடர் போராட்டத்தால் தில்லி ஜவஹர் லால் நேரு பல்கலைக்கழக கட்டண உயர்வு வாபஸ் பெறப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாணவர்களின் கல்வியை பாதிக்கும் வகையில் உயர்த்தப் பட்ட கல்விக்கட்டணத்தை திரும்பப்பெறக்கோரி  தலைநகர் தில்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் திங்கள்கிழமையன்று முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்கலைக்கழகத்தில்  பயிலும் மாணவர்களில் 40 சதவீதம் பேர் ஏழ்மைப் பின்னணியில் இருந்து வந்தவர்கள். இந்த கல்விக் கட்டண உயர்வால் அவர்களால் எவ்வாறு தங்கள் மேற்படிப்பை தொடர முடியும்? எனவே கட்டண  உயர்வை திரும்பப்பெற வேண்டும் என்று மாணவர்கள் வலியுறுத்தினர்.
போராட்டத்தில் ஈடுபட்ட ஜவஹர்லால் பல்கலைக்கழக மாணவர்கள்,  மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியாலை சந்தித்துப் பேசினர். மாணவர் பிரதிநிதி களை அழைத்து அவர்களது கோரிக்கைகளை அமைச்சர் கேட்டறிந்தார். அதையடுத்து மாண வர்கள் தங்கள் கோரிக்கையை எழுத்துப்பூர்வமாக மத்திய அமைச்சரிடம் வழங்கினர். இந்நிலையில் மாணவர்களின் போராட்டத்தை அடுத்து தில்லி  ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக கட்டண உயர்வு வாபஸ் பெறப்படுவதாக அறிவிப்பு வெளி யாகியுள்ளது.  தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக நிர்வாகம் புதன்கிழமையன்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது.

BSNL Employees Union Nagercoil