அன்புள்ள தோழர்களே,
நேற்று (14.11.2019) AUAB கூட்டம் நடைபெற்றது.  BSNLEU, NFTE, SNEA, AIBSNLEA, FNTO, BSNL MS, SNATTA, BSNL ATM மற்றும் BSNL OA ஆகிய சங்கங்களின் பொதுச்செயலாளர்கள்/ பிரதிநிதிகள் பங்கேற்றனர்.  அக்டோபர் மாத ஊதியம் வழங்குவது தொடர்பாக நிர்வாகம் எந்த நடவடிக்கையையும் எடுக்காதது தொடர்பாக தனது ஆழ்ந்த கவலையை இந்தக் கூட்டம் தெரிவித்தது.  கடந்த ஆறு மாதங்களாக ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டதை உரிய மட்டங்களுக்கு செலுத்தாதால், கடும் இன்னல்களுக்கு ஊழியர்கள் ஆளாகி வருகின்றனர்.  அரசாங்கம், 4G அலைக்கற்றை வழங்க ஏற்கனவே முடிவெடுத்த பின்னரும், முறையாக 4G சேவையை வழங்க இயலாத BSNL  நிர்வாகத்தின் மீது தனது ஆழ்ந்த கோபத்தை இந்தக் கூட்டம் தெரிவித்தது.

விருப்ப ஓய்வு திட்டம் என்ற பெயரில், கடும் நெருக்கடி மற்றும் வற்புறுத்தலின் காரணமாக பெரும்பாலான ஊழியர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.  எதார்த்தத்தில், அது ”நிர்பந்தப்படுத்தப்பட்ட ஓய்வு திட்டம்” (Forced Retirement Scheme) என மாறியுள்ளது.  அவர்களின் ஓய்வு பெறும் வயது 58 ஆக குறைக்கப்படும் என ஊழியர்கள் தொடர்ச்சியாக மிரட்டப்பட்டு வருகின்றனர்.  முன் தேதியிட்டு 3வது ஊதிய மாற்றம் அமலாக்கப்பட்டால் மற்றும் ஓய்வூதிய மாற்றம் ஆகியவை விருப்ப ஓய்வு திட்டத்தில் சென்றவர்களுக்கு என்ன ஆகும் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. 

விருப்ப ஓய்வு திட்டத்தில் செல்பவர்கள் தனது 60 வயதை எட்டிய பின்னரே ஓய்வூதியத்தை COMMUTE செய்ய முடியும்.  ஆனால் தற்போதுள்ள விதிகளின் படி, தனது ஓய்விலிருந்து ஒரு வருட காலத்திற்குள், ஓய்வு பெற்றவர் ஓய்வூதியத்தை COMMUTE  செய்ய விண்ணப்பிக்க வேண்டும்.  இல்லையென்றால், அவர் மருத்துவ பரிசோதனைக்கு செல்ல வேண்டும்.  இது விருப்ப ஓய்வு திட்டத்தில் செல்பவர்களுக்கு மிகப்பெரிய பிரச்சனையை உருவாக்கும். 

விருப்ப ஓய்வு திட்டத்தில் செல்பவர் தனது 60 வயதை அடையும் முன் இறந்து விட்டால், அந்த குடும்பம், ஓய்வூதியத்தை COMMUTE செய்யும் பலனை பெற முடியாது.  இது விருப்ப ஓய்வு திட்டத்தில் செல்பவரின் குடும்பத்திற்கு மிகப்பெரிய இழப்பாக இருக்கும்.

இந்த பிரச்சனைகளுக்கெல்லாம் தீர்வு காணாமல், விருப்ப ஓய்வு திட்டத்திற்கு விருப்பம் கொடுக்க ஊழியர்கள் நிர்பந்திக்கப்படுகிறார்கள்.  இந்த கடுமையான விருப்ப ஓய்வு திட்டத்திற்கு பின், பணிச்சுமை எவ்வாறு சமாளிக்கப்படும் அல்லது நிறுவனத்தின் கட்டுமானம் என்னவாக இருக்கும்?  இது தொடர்பாக ஊழியர் மற்றும் அதிகாரிகள் சங்கங்களோடு விவாதிக்க நிர்வாகம் கவலை கொள்ளவில்லை.  பெருமளவு ஊழியர்களை வேலையை விட்டு அனுப்புவதிலேயே குறியாக உள்ளனர். 

இந்த பிரச்சனைகளுக்கெல்லாம தீர்வு கண்டிட 14.11.2019 அன்று கூடிய AUAB கூட்டம், 2019, நவம்பர் 20, 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் கார்ப்பரேட் அலுவலகம், மாநில அலுவலகம் மற்றும் மாவட்ட அலுவலகங்கள் முன்பு 3 நாட்கள் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளது.  AUABயின் இதர சங்கங்களோடு இணைந்து இந்த உண்ணாவிரத போராட்டத்தை, மாநில மற்றும் மாவட்ட சங்கங்கள் வெற்றிகரமாக்கிட வேண்டும் என BSNL ஊழியர் சங்கம் கேட்டுக் கொள்கிறது.
ReplyForward

BSNL Employees Union Nagercoil