1)   BSNLல் விருப்ப ஓய்வு திட்டத்தின் நோக்கம் தொடர்பாக யாருக்கும் எந்த சந்தேகமும் தேவையில்லை.  இது ஊழியர்களின் நலன்களுக்காக கொண்டு வரப்பட்டதல்ல.  ஆனால், தனியார் மயமாக்க வேண்டும் என்பதன் தயாரிப்பு பணியாக ஊழியர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கான திட்டமே. VSNL, ITDC hotels, BALCO உள்ளிட்ட தனியார்மயமாக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களில், ஆட்குறைப்பிற்கு எதிராக நடைபெற்ற வேலை நிறுத்தங்களும், இயக்கங்களும், தனியார் மயமாக்கும் முன்பு ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என கார்ப்பரேட்டுகள் அரசை வலியுறுத்தும் வகையிலான பாடத்தை சொல்லிக் கொடுத்துள்ளது.
2)   ஓய்வூதிய செலவை எதிர்காலத்தில் குறைப்பதற்காக அரசாங்கத்தின் தெளிவான திட்டம் தான் விருப்ப ஓய்வு திட்டம்.  ஒரு தொழிலாளி பணி மூப்பின் அடிப்படையில் ஓய்வு பெற்றார் என்றால், அவருக்கு பஞ்சப்படி, ஓய்வூதிய மாற்றம், குடும்ப ஓய்வூதியம் உள்ளிட்டவைகள் வழங்குவது தொடர்பான தெளிவான உத்தரவுகள் உள்ளன.  ஆனால் விருப்ப ஓய்வு திட்டத்தில் செல்பவர்களுக்கு, அதற்கான உத்தரவுகள் தெளிவாக இல்லை.  அதில் தெளிவற்ற பல பகுதிகள் உள்ளன.  விருப்ப ஓய்வு திட்டம் ஒரு தொகுப்பு (PACKAGE).  அதில் ஓய்வூதிய மாற்றம் என்பது இல்லை என மற்றொரு தீர்ப்பில் நீதிமன்றம் தெரிவித்துள்ளதை நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.
3)   MTNL உள்ளிட்ட நிறுவனங்களில், விருப்ப ஓய்வு திட்டம் அமலாக்கப்பட்ட பின்னர் ஊழியர் பற்றாக்குறை காரணமாக வருமானம் குறைந்து, நஷ்டம் ஏற்பட்டதால் சேவைகள் மேம்படவில்லை என்பதே கடந்த கால அனுபவம்.
4)   விருப்ப ஓய்வு திட்டத்திற்கு 17,000 கோடி ரூபாயை தற்போது செலவு செய்வதன் மூலம், எதிர்காலத்தில் விருப்ப ஓய்வு திட்டத்தில் செல்பவர்களின் ஓய்வூதிய செலவுகள் குறையும் என அரசு எதிர்பார்க்கிறது.  அது பல பத்தாண்டுகளுக்கு லட்சக்கணக்கான கோடி ரூபாய்கள் அரசிற்கு மீதமாகும்.
5)   இந்த பணம் BSNLன் புத்தாக்கத்திற்குத்தான் அரசு வழங்குகிறது என்று சொன்னால், BSNLன் வளர்ச்சிக்கு அரசாங்கம் ஏன் இத்தனை ஆண்டுகளாக அரசின் கஜானாவில் இருந்து ஒரு பைசா கூட செலவளிக்க வில்லை என்ற கேள்வி நம் முன் எழுகிறது.
6)   வியாபாரிகள், அரசியல் வாதிகள், சுய தொழில் செய்பவர்கள் போன்று 60 அல்லது 65 வயதான பின்னரும், BSNL ஊழியர்களும் திறம்பட பணியாற்றக் கூடிய வலிமை பெற்றவர்கள்.  பணியில் இருக்கும் ஊழியர்கள், மேலும் மரியாதை, அதிகப்படியான வருமானம், அதிகப்படியான சக்தி மற்றும் அதிகப்படியான உடல் நலம் ஆகியவற்றுடன் இருப்பார்கள்.  ஆனால், ஓய்வு பெற்றவர்கள், வேறு ஏதேனும் பயனுள்ள வகையில் தங்களை தகவமைத்துக் கொள்ளவில்லையெனில், வாழ்க்கை மாறுபட்டதாகவே இருக்கும்.
7)   ஒப்பீட்டு நோக்கில், பணி மூப்பின் அடிப்படையில் ஓய்வு பெற்றவரை விட, விருப்ப ஓய்வு திட்டத்தில் செல்பவர்களுக்கு, பணி ஓய்வு சமயத்தில், அதிக பணம் கிடைக்கும்.  ஆனால் அவர் அந்த பணத்திற்காக ஒரு கணிசமான தொகை வருமான வரியாக கட்ட வேண்டி இருக்கும்.
8)   60 வயதிற்கு பின்னர் தான் விருப்ப ஓய்வு திட்டத்தில் செல்பவர்களுக்கு SENIOR CITIZENSகளுக்கு வழங்கப்படும் அதிகப்படியான வட்டி விகிதம் வங்கிகளில் வழங்கப்படும்.
9)   அரசு, நிர்வாகம், மீடியாக்கள், பெரும் கார்ப்பரேட்டுகள் ஆகியவற்றின் எதிர்மறை பிரச்சாரங்கள், ஊழியர்கள் மனதில் ஒரு பாதுகாப்பற்ற எண்ணத்தை உருவாக்கி உள்ளன.  சுமார் ஒரு வருட காலமாக ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதியம் வழங்காதது, நிரந்தர ஊழியர்களுக்கு மாத ஊதியம் வழங்குவதில் ஏற்பட்டு வரும் கால தாமதம், BSNLஐ மூடுவது/ தனியார் மயமாக்குவது தொடர்பாக நிதி ஆயோக் மற்றும் நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கைகள், ஊழியர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட GPF, கடன்கள் ஆகியவை உரிய மட்டங்களுக்கு செலுத்தாதது ஆகியவை BSNLல் தங்கள் எதிர்காலம் தொடர்பான அச்சத்தை ஏற்படுத்தி, அவர்களை விருப்ப ஓய்வு திட்டத்தில் செல்ல நிர்பந்தப் படுத்துகின்றன.  பெருந்திரள் மன நோய் உள்ள சமயத்தில் எடுக்கப்படும் முடிவுகள் எப்போதும் சரியாக இருக்கும் என்று கூற  முடியாது.
10)  இவற்றையெல்லாம் ஊழியர்கள் சிந்திப்பதோடு, விருப்ப ஓய்வு திட்டத்தில் செல்லும் போது கிடைப்பதோடு, பணி மூப்பில் செல்லும் போதும் அதற்கு பின்னரும் கிடைப்பதை எல்லாம் கணக்கிட்டு ஒப்பீடு செய்து பார்க்க வேண்டும்.  விருப்ப ஓய்வு திட்டத்தின் நிபந்தனைகள் அனைத்தையும் முழுமையாக படித்து பார்க்க வேண்டும்.
விருப்ப ஓய்வு திட்டம் விரித்துள்ள வலைக்குள் சிக்கி ஒருவரும் பலியாகி விடக்கூடாது.  பத்தாண்டுகளுக்கு முன், BSNLல் உள்ள ஒரு லட்சம் ஊழியர்களுக்கு, அதாவது 50% பேருக்கு விருப்ப ஓய்வு திட்டம் முன்மொழியப்பட்ட போது 1% ஊழியர்கள் கூட அதனை ஏற்க தயாராக இல்லை.
அதனால் அவர்கள் பெற்ற உயர் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதிய மாற்றம் உள்ளிட்டவைகளால் அவர்கள் இன்று மிகுந்த மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள்.
இந்தக் குறிப்பு முழுமையானது அல்ல.  ஆனால் விருப்ப ஓய்வு திட்டம் தொடர்பான ஒரு சில பொதுவான விஷயங்கள் மட்டுமே.

BSNL Employees Union Nagercoil