மாவட்டத்தலைவர் தோழர் K.ஜார்ஜ் அவர்கள் தலைமையில் இன்று காலை 10.30 மணிக்கு சங்க அலுவலகத்தில் வைத்து மாவட்டச் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.மாவட்டச் செயற்குழுவில் BSNL CCWF அகில இந்திய துணைபொதுச்செயலாளர் தோழர் C.பழனிச்சாமி கலந்து கொண்டார். மாவட்ட துணைத்தலைவர்கள் தோழர் V.ராதகிருஷ்ணன் மற்றும் M. கங்காதரன் அவர்களின் தொழிற்சங்க பணிகளை பாராட்டி கூட்டத்தில் கெளரவிக்கப்பட்டது.
கூட்டத்தின் முடிவுகளாக
  •  அனைத்து கிளைகளை பொதுக்குழுகளை டிசம்பர் முதல் வாரத்திற்குள் கூடடப்பட வேண்டும்.
  • AUAB ன் போராட்டங்களை சிறப்பாக நடத்த ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
  • காசியாபாத் மத்திய செயற்குழு முடிவுகளை உரிய முறையில் அமலாக்க வேண்டும்.