இந்திய டெலிகாம் துறையில் ஏற்பட்டுள்ள கடுமையான போட்டியின் காரணமாகப் பல முன்னணி நிறுவனங்கள் பெரிய அளவிலான வர்த்தகத்தை இழந்து அதிகளவிலான நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. செப்டம்பர் காலாண்டில் கூட ஏர்டெல், ஐடியா-வோடபோன், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் ஆகிய 3 நிறுவனங்கள் மட்டும் சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் அளவிலான நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. இப்படி இருக்கையில் மத்திய அரசு டெலிகாம் நிறுவனங்களை நஷ்டத்தில் இருந்து மீட்டு எடுப்போம் என உறுதி அளித்துள்ளது. இந்நிலையில் தொடர் நஷ்டத்தில் இருந்த ஏர்டெல், வோடபோன்-ஐடியா ஆகிய நிறுவனங்கள் டெலிகாம் சேவைக்கான கட்டணங்களை உயர்த்த முடிவு செய்து அதற்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ள நிலையில், மலிவான கட்டணம் மற்றும் இலவசங்கள் மூலமாகவே கோடி கணக்கான வாடிக்கையாளர்களைப் பெற்ற முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும் கட்டணங்களை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. ஜியோவின் இந்த அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் செவ்வாய்க்கிழமை ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியா டெலிகாம் துறையில் நிலையிலான வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கவும், வர்த்தகத்தைச் சந்தையும், டெலிகாம் நிறுவனங்களின் பங்கு மதிப்புகளை மேம்படுத்தவும் முக்கியப் பணிகளைச் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இதன் ஒருபகுதியாக அடுத்த ஒரு வாரத்தில் சேவைகளுக்கான கட்டணத்தை உயர்த்த உள்ளோம் என அறிவித்துள்ளனர்.

டிராய்

இந்திய டெலிகாம் கட்டுப்பாட்டு ஆணையமான டிராய் உடன் அனைத்து டெலிகாம் நிறுவனங்களும் இணைந்து கட்டணங்களைச் சீர்திருத்தம் செய்யும் பணிகளைச் செய்து வருகிறது. இதன்படி இந்தியா வாடிக்கையாளர்களுக்கு ஏதுவான கட்டண அளவையும் நிர்ணயம் செய்து தற்போது நாட்டில் உருவாகியுள்ள டிஜிட்டல் புரட்சியை எந்த வகையிலும் பாதிக்காத வண்ணம் கட்டண அளவீடுகளை முடிவு செய்ய உள்ளதாக முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ தெரிவித்துள்ளது. மேலும் அடுத்தச் சில வாரங்களில் கட்டணங்கள் மாற்றங்கள் அறிவிக்கப்படும்.

பங்காளிகள் பல விஷயங்களில் குழாயடி சண்டை போட்டுக்கொண்ட டெலிகாம் நிறுவனங்கள் தற்போது அதிகக் கட்டணங்களை வசூலிக்க ஒன்றாக இணைந்துள்ளனர். இதன் மூலம் அடுத்தச் சில வாரங்களுக்குள் டேட்டா மற்றும் வாய்ஸ் கால் விலை அதிகரிக்க உள்ளது. இதை எதிர்கொள்ள மக்கள் தயாராக வேண்டும்.

மத்திய அரசு தனியார் நிறுவனங்களின் வருவாய் மற்றும் முதலீட்டை காப்பதற்காக மத்திய அரசு கடுமையான ஆலோசனைகளையும், முடிவுகளையும் எடுத்து வருகிறது. மறுப்புறம் பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் போன்ற அரசு டெலிகாம் நிறுவனங்களில் வர்த்தகம் வருவாய் இல்லாமல் பல ஆயிரம் ஊழியர்கள் வெளியேற்றப்படுகிறார்கள்.

BSNL Employees Union Nagercoil