அரசு ஊழியர்களுக்கு 33 வருட சேவை அல்லது 60 வயது, இதில் எது முதலில் வருகிறதோ அப்போது ஓய்வு என்கிற திட்டத்தை மத்திய அரசாங்கம் அறிவிக்க போவதாக ஒரு சில விஷமிகள் கடுமையாக வதந்திகளை பரப்பி வந்தனர்.   இந்த மிரட்டலும், பெரிய எண்ணிக்கையிலான ஊழியர்கள் விருப்ப ஓய்வு திட்டத்திற்கு விருப்பம் தெரிவிக்க முக்கிய காரணங்களில் ஒன்றாக இருந்தது.  எனினும், மத்திய ராஜாங்க நிதியமைச்சர் திரு அனுராக் சிங் தாகூர் அவர்கள், 25.11.2019 அன்று பாராளுமன்றத்தில்  அரசு ஊழியர்களுக்கு 33 வருட சேவை அல்லது 60 வயது, இதில் எது முதலில் வருகிறதோ அப்போது ஓய்வு என்கிற திட்டம் எதுவும் அரசாங்கத்திடம் இல்லையென தெரிவித்துள்ளார்

BSNL Employees Union Nagercoil