இந்தியாவுக்கு இது மிக கஷ்டமான காலம் தான். ஒரு புறம் வாட்டி வதைக்கும் பொருளாதார வீழ்ச்சி. இதை மேலும் பயமுறுத்தும் விதமாக தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் பொருளாதார வளர்ச்சி குறித்தான கணிப்புகள். இந்த வகையில் முன்னணி மதிப்பீட்டு நிறுவனமான இக்ரா, கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் (ஜிடிபி) 4.7 சதவிகிதமாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் நிலவி வரும் பொருளாதார வீழ்ச்சி, நிலவி வரும் மந்த நிலை இவற்றால் தொடர்ந்து நாட்டின் உற்பத்தி விகிதமும் வீழ்ச்சி கண்டு வருகிறது.

ஜிவிஏ மதிப்பு

இதனால் தொடர்ந்து அனைத்து மதிப்பீட்டு நிறுவனங்களும் ஜிடிபி விகிதத்தினை குறைத்து வருகின்றன. இதே நாட்டின் மொத்த மதிப்பு சேர்க்கப்பட்ட (GVA) அடிப்படை விகிதம், கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது 4.5 சதவிகிதமாக இருக்கும் என்றும் கணித்துள்ளது.

வளர்ச்சியை தக்க வைத்துக் கொள்ளலாம்

மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் மற்றும் ஜிவிஏ ஆகியவை முறையே 5.0 சதவிகிதமாகவும், 4.9 சதவிகிதமாகவும் நடப்பு நிதியாண்டில் முதல் காலாண்டில் இருந்துள்ளது. இந்த நிலையில் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் வேளாண்மை மற்றும் சேவைகள் முதல் காலாண்டில் நல்ல வளர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்தன. இந்த நிலையில் கடந்த இரண்டாவது காலாண்டிலும் தக்க வைத்துக் கொள்ளலாம் என்றும் இக்ரா மதிப்பிட்டுள்ளது.

ஜிவிஏ எப்படி?

இக்ராவின் முதன்மை பொருளாதார நிபுணர் அதிதி நாயர் கூறுகையில், கடந்த செப்டம்பர் காலாண்டில் ஜிவிஏ 4.5 சதவிகிதமாக குறையும் என்றும் எதிர்பார்க்கிறது. இது இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் 4.9 சதவிகிதமாக இருந்தது.

வளர்ச்சி வீழ்ச்சி

உள்நாட்டு தேவை குறைவு, முதலீட்டு செயல்பாடு மற்றும் எண்ணெய் அல்லாத வர்த்தக ஏற்றுமதிகள், உற்பத்தி வளர்ச்சி, நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 0.6 சதவிகித விளிம்பிலிருந்து மேலும் குறையும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. கடந்த ஆகஸ்ட், செப்டம்பர் 2019 மாதங்களில் பெய்த கன மழையும், பருவமழை தாமதமாக திரும்ப பெறுவதும், சுரங்க மற்றும் கட்டுமானத் துறைகளில் தடை செய்யப்பட்ட நடவடிக்கைகளும், விவசாய மற்றும் வீட்டுத் துறைகளில் இருந்து மின்சாரத்திற்கான குறைந்த தேவைக்கு பங்களித்தன.

சில துறைகள் பலவீனமடையும்
இந்த நிலையில் தொழில்துறையின் வளர்ச்சியும் குறைந்துள்ளது. சுரங்கம் மற்றும் குவாரி கட்டுமானம் மற்றும் மின்சாரம், எரிவாயு, நீர் வழங்கல் மற்றும் பிற பயன்பாடுகளின் ஜிவிஏ வளர்ச்சி, கடந்த செப்டம்பர் காலாண்டில் பலவீனமடையும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.