BSNLன் புத்தாக்கத்திற்கான வழிவகைகள் தொடர்பாக ஒரு சில அமைப்புகளோடு, நேற்றைய தினம் (26.11.2019), மனிதவள இயக்குனர் ஒரு கூட்டத்தை நடத்தியுள்ளார். BSNLல் முதன்மை அங்கீகரிக்கப்பட்ட சங்கமான BSNL ஊழியர் சங்கத்திற்கு எந்த ஒரு நிர்வாக தகவலையும் கொடுக்காமல், BSNLன் புத்தாக்கம் தொடர்பாக விவாதிக்கப்பட்டுள்ளது என்பது மிகவும் வித்தியாசமானது.  இதற்கு தனது எதிர்ப்பினை, BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் WhatsApp செய்தி மூலம்  மனிதவள இயக்குனருக்கு தெரிவித்துள்ளார்.  பிரித்தாளும் சூழ்ச்சியினை நிர்வாகம் கடைப்பிடிக்க கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.  ஒரு சில சமயங்களில், சில அமைப்புகளுக்கு தகவல் கொடுக்க BSNL நிர்வாகம், அதீத அக்கறை எடுத்து கொள்வதையும் நாம் கவனித்துள்ளோம்.  இவ்வாறிருக்க, முதன்மை அங்கீகரிக்கப்பட்ட சங்கத்திற்கு எந்தவொரு நிர்வாக தகவலும் கொடுக்காமல் இது போன்ற முக்கியமான கூட்டங்களை எப்படி நடத்துகிறார்கள் என்பது நமக்கு புரியவில்லை.

BSNL Employees Union Nagercoil