தொழிற்சங்க உரிமை, வேலைநிறுத்த உரிமை உள்ளிட்ட தொழிலாளர்களின் அடிப்படை உரிமை களை மட்டுமல்ல, தொழிலாளர்களின் வேலை யையே முற்றாக இல்லாமல் செய்கிற; முதலாளி – தொழிலாளி என்ற சுரண்டல் முறையை சட்டப் பூர்வமாக அங்கீகரிக்க வகை செய்கிற “தொழிலக உறவுகள் சட்டத்தொகுப்பு மசோதா – 2019”க்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து மக்களவையில் இடதுசாரி கட்சி களின் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். மக்களவையில் நவம்பர் 28 வியாழனன்று தொழிலக உறவுகள் சட்டத்தொகுப்பு மசோதா 2019 -ஐ மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் சந்தோஷ்குமார் கங்வார் அறிமுகப்படுத்தி பேசினார். தொழிற்சாலைகளில் நிர்வாகத்திற்கும் தொழிலாளர்களுக்கும் இடையிலான உறவு களை மேம்படுத்தும் நோக்கத்துடனும் இந்தியா வில் தொழில் நடத்துவதை மிகவும் எளிதாக்கும் வகையிலும் இந்த மசோதா தாக்கல் செய்யப்படு கிறது என அவர் கூறினார்.

ஆனால் உண்மையில் இந்த மசோதா, மத்திய பாஜக அரசு, இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத் தால் அங்கீகரிக்கப்பட்ட தொழிலாளர் சட்டங்கள் அனைத்தையும் முற்றாக ஒழித்துக் கட்டும் விதத்தில், மொத்தமுள்ள 44 தொழிலாளர் சட்டங் களை நான்கு சட்டத்தொகுப்புகளாக மாற்றும் கொடிய சுரண்டல் ஆதரவு திட்டத்தின் ஒரு பகுதியே. மொத்தமுள்ள 44 தொழிலாளர் சட்டங்களை, ஊதிய விகிதங்கள்; தொழிலக உறவுகள்; சமூகப் பாதுகாப்பு மற்றும் தொழிலக பாதுகாப்பு; தொழி லாளர் சுகாதாரம் மற்றும் பணி நிலை மேம்பாடு ஆகிய நான்கு தலைப்புகளுக்குள்  தொகுத்து மொத்தமே 4 சட்டங்களாக மாற்றும் தனது திட்டத்தை, நாடாளுமன்றத்தில் உள்ள பெரும்பான்மையைப் பயன்படுத்தி பாஜக அரசு நிறைவேற்றும் முனைப்பில் உள்ளது.

ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற நாடாளு மன்றத்தின் கடந்த கூட்டத்தொடரில், தொழிலாளர் ஊதியங்கள் சட்டத்தொகுப்பு மசோதா இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது; மற்றொரு சட்டத்தொகுப்பான தொழிலாளர் சுகாதா ரம் மற்றும் தொழிலக பணி நிலை மேம்பாடு சட்டங்கள் தொகுப்பு மசோதா, மக்களவையில் அறி முகம் செய்யப்பட்டு, தொழிலாளர்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போதைய கூட்டத்தொடரில் தொழிலக உறவுகள் சட்டதொகுப்பு மசோதா அறிமு கம் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதா இந்தியத் தொழிலாளி வர்க்கத்தின் மீது ஈவிரக்கமற்ற தாக்குதல்களை கட்டவிழ்த்துவிட வகை செய்கிறது. முதலாளிகள் விருப்பம்போல் தொழிலாளர்களை அமர்த்தவும் துரத்தவும் சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்கிறது. இதற்கு முன்பு சட்டவிதிகளின் குறிப்பு களில் ஒன்று என்ற அளவில் மட்டும் வகைப்படுத்தப் பட்டிருந்த “குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமான வேலைவாய்ப்பு (பிக்சட் டெர்ம் எம்ப்ளாய்மெண்ட்)” என்பதை சட்டத்தின் ஒரு பகுதியாகவே மாற்ற இந்த மசோதா வழி செய்கிறது. இதன்படி ஐந்து நாட்கள் முதல் ஐந்து வருடம் வரை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே ஒரு தொழிலாளிக்கு ஒரு நிறுவனம் வேலையளிக்கும். அதற்கு பிறகு அவரை வேலையில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. எனினும் பணியில் இருக்கும்போது ஏற்கெனவே நிரந்தர ஊழியர்களுக்கு உள்ள சட்டப்பூர்வமான ஊதியம் உள்ளிட்ட உரிமைகள் உண்டு எனக் கூறப்பட்டுள்ளது.

1926 இந்தியத் தொழிற்சங்க சட்டம், தொழி லாளர் நிலையாணைச் சட்டம்  மற்றும் 1947 தொழில் தாவா சட்டம் ஆகிய மூன்று சட்டங்களை ஒரே  தொகுப்பாக்கி அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த மசோதா, தொழிற்சங்கங்கள் அமைப்பதை முற்றாக தடுக்கும் நோக்கத்துடன் வரையறுக்கப் பட்டுள்ளது. ஒரு நிறுவனத்தில் அல்லது ஒரு ஆலை யில் பட்டியலில் உள்ள தொழிலாளர்களில் 75சத வீதம் அல்லது அதற்கும் அதிகமான தொழிலாளர் களது ஆதரவு இருந்தால் மட்டுமே ஒரு தொழிற் சங்கம் அங்கீகரிக்கப்பட்ட சங்கமாக அறிவிக்கப் படும் என்று மசோதா குறிப்பிடுகிறது. இது இன்றைக்கு தொழிலாளர் நலனுக்காக போராடிக் கொண்டிருக்கும் மத்திய தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட எந்தவொரு சங்கத்தையும் அங்கீகரிக்கப் பட்ட சங்கமாக ஏற்றுக்கொள்ளாமல், தொழிற்சங் கங்களை முடக்கும் நோக்கத்துடன் கூடிய மிக மோசமான ஷரத்து ஆகும்.

மேலும் 300 தொழிலாளர்கள் வரை உள்ள தொழிற்சாலைகள் அல்லது நிறுவனங்களின், எந்த நேரத்திலும் நட்டக்கணக்கு காட்டி தொழிற்சாலை யை மூடவோ, ஆட்குறைப்பு செய்யவோ, தொழி லாளர் உரிமைகளை பறிக்கவோ அரசின் அனு மதியை சம்பந்தப்பட்ட நிர்வாகங்கள் கோரு வதற்கும் இந்த மசோதா வழி செய்கிறது. இந்திய தொழிலாளி வர்க்கத்தின் மீது கொடூர தாக்குதலாக முன்மொழியப்பட்டுள்ள இம்மசோதாவை அறிமுக நிலையிலேயே இடதுசாரிக் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இம்மசோதாவை அறிமுகம் செய்த  உடனே,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்உறுப்பினர்கள் ஏ.எம்.ஆரிப், சு.வெங்கடேசன், இந்திய கம்யூனிஸ்ட்கட்சி உறுப்பினர் கே.சுப்பராயன் ஆகியோர் எழுந்து, இம்மசோதாவை அறிமுகமே செய்யக்கூடாது; இடதுசாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறோம் என்று பேசினர். பின்னர் மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர் பி.ஆர்.நடராஜன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் எம்.செல்வராசு ஆகியோரும் எழுந்து, 5 இடதுசாரி உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.

BSNL Employees Union Nagercoil