2008ஆம்  ஆண்டு அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளில் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டு வங்கி கள் உள்ளிட்ட பல நிதி நிறுவனங்களும் ஏராளமான தொழில் நிறுவனங்களும் திவா லாகின. ஆனால் அன்று அந்த நெருக்கடி இந்தியாவைப் பெருமளவுக்குப் பாதிக்க வில்லை. காரணம் இந்தியாவில் பெரும்பான் மையான நிதி நிறுவனங்கள் பொதுத் துறை களாக இருந்ததுதான். பொதுத்துறை வங்கி களும், காப்பீட்டுநிறுவனங்களும், பொதுத் துறை நிறுவனங்களாக இருந்த காரணத் தினால் அமெரிக்காவை அசைத்த அந்த  நிதி நெருக்கடி இந்தியாவைத் தொட வில்லை. இதிலிருந்து ஆட்சியாளர்கள் படிப்பினை பெற வேண்டாமா?

கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையின்மை அதிகரித்துள் ளதாக ஓர் ஆய்வு கூறுகிறது.  இத்தகைய சூழலில்  பொதுத்துறை நிறுவனங்களில் தான்  தலித்,பழங்குடி மற்றும் பிற்படுத்தப் பட்ட மக்களுக்கு ஓரளவுக்காவது இடஒதுக் கீட்டின் மூலம் வேலை கிடைக்க வாய்ப்புள் ளது. அந்த நிறுவனங்கள் தனியார்மய மாக்கப்பட்டால் இடஒதுக்கீட்டால் பலன் பெறும் அந்த வாய்ப்பும் பறிக்கப்படுகிறது. சமூகநீதி தடுக்கப்படுகிறது.

சமீபத்தில் தாய்லாந்து நாட்டிற்கு சென்று ஆசிய நாட்டுத் தலைவர்களைச் சந்தித்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தாய்லாந்து மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்ட திருக்குறள் நூலை வெளி யிட்டார். குறளுக்கு புகழாரம் சூட்டினார்.

அவருக்கு ஒரு குறளை மேற்கோள் காட்டுவது இங்கு பொருத்தமாக இருக்கும்.

“ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவுடை யார்”

– பின்னால் வரக்கூடிய வருமானத்தை நினைத்துக் கொண்டு  இப்போது கையில் இருக்கும் அடிப்படை மூலதனத்தை இழந்து விடக் காரணமான செயலை அறி வுடையோர் செய்யமாட்டார்கள்

– என்பதே அக்குறளின் பொருள்.

பிரதமருக்கு தமிழ் தெரியாது. ஆனால், நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தமிழ் நன்கறிவார். பொதுத்துறை நிறுவனங்க ளில் பங்குகளை விற்பதோ, நிறுவனங்க ளை முழுமையாக விற்பதோ  வள்ளுவர் காட்டும் வழிக்கு முரணானது மட்டுமல்ல, நாட்டுக்கும், நாட்டு பொருளாதாரத்திற்கும், நாட்டு மக்கள் நலனுக்கும் எந்த நன்மையை யும் பயக்காது, தீமையைத்தான் ஏற்படுத்தும் என்பதோடு தேசத்தின் இறையாண்மையே கேள்விக்குறியாகும். இதை எதிர்த்துத் தான், நவம்பர் 28 பெட்ரோலியத்துறை தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் நடந்துள் ளது. அதற்கு ஆதரவாக, சிபிஎம் நாடாளு மன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற வளா கத்தில் ஆர்ப்பாட்டமும் நடத்தியுள்ளனர். டிசம்பர் மாதம் முழுவதும், பொதுத்துறை பாதுகாப்போம் என்ற முழக்கத்துடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாபெரும் இயக்கங்களை நடத்துகிறது.

 

BSNL Employees Union Nagercoil