இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பு  ஆண்டில் 4.5 சதவீதமாக சரிந்துள்ளது என்று மத்திய புள்ளியியல் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.  இந்தியாவின் ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதம்  வரையிலான நடப்பு நிதியாண்டுக் கான இரண்டாம் காலாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக் கான கணக்கெடுப்பு முடிவுகள் வெள்ளியன்று மாலை வெளி யிடப்பட்டது. அதில் நடப்பு நிதி யாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி பெரும் சரிவடைந்துள்ளது. 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் 5 சதவீதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி தற்போது 4.5 சதவீதமாக  மிகவும் மோசமான நிலையில் வீழ்ச்சியடைந்துள்ளது. இதே இரண்டாம் காலாண்டில் கடந்த  2018 ஆம் ஆண்டில் பொரு ளாதார வளர்ச்சி 7 சதவீதமாக  இருந்தது.

கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. 2013 ஆம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை யிலான காலாண்டில் 4.3 சத வீதத்தில் பொருளாதாரம் வளர்ச்சி இருந்தது. மத்திய பாஜக அரசு, மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்க எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. பொருளாதாரம் மிகவும் மந்த நிலைக்கு சென்று அதன் வளர்ச்சி விகிதம் 4.5 சதவீதம் என்ற அளவில் மேலும் சரிந்துள்ள தால் வேலைவாய்ப்பின்மை, தொழில் வளர்ச்சியின்மை போன்ற பல்வேறு இன்னல்களை நாடு சந்திக்க நேரிடும் என்று பொரு ளாதார வல்லுநர்கள் எச்சரித்துள் ளனர்.

மாநிலங்களவையில் கடந்த புதன்கிழமையன்று  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், நாட்டில் பொருளாதார வளர்ச்சி என்பது ஏறும், இறங்கும். ஆனால்  பொருளாதார மந்தநிலை இப்போ தல்ல, எப்போதுமே ஏற்படாது’ என்று தெரிவித்தார். ஆனால் அமைச்சர்  நிர்மலா சீதாராமனின் கூற்று பொய்யாகி, 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் மோசமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

BSNL Employees Union Nagercoil