ஏர்டெல் மற்றும் வொடோபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் தங்களது குரல் அழைப்பு மற்றும் டேட்டா கட்டணங்களை 45% அளவிற்கு உயர்த்தி உள்ளன. அதே போல ஜியோ நிறுவனமும் தனது கட்டணங்களை 40% அளவிற்கு உயர்த்தி உள்ளது. தற்போது இந்த மூன்று தனியார் நிறுவனங்களும் உயர்த்தி உள்ள கட்டண உயர்வு நிச்சயமாக அதிகப்படியானது தான். தற்போது, தனியார் நிறுவனங்களின் கட்டணங்களுக்கு இணையாக BSNLம் தனது கட்டணங்களை உயர்த்த வேண்டும். தற்போதுள்ள நெருக்கடியில் இருந்து மீள, இது BSNLக்கு உதவி செய்யும். வெகு விரைவில் கட்டணங்கள் உயரும் என்றும் அதன் மூலம் BSNLன் நிதி நிலை பெருமளவு உயரும் என கடந்த காலங்களில் BSNL ஊழியர் சங்கம் தொடர்ச்சியாக கூறி வந்ததை நாம் நினைவு படுத்த விரும்புகிறோம்.

குரல் அழைப்பு மற்றும் டேட்டா கட்டணங்கள் உயர்வுடன், BSNLக்கு 4G அலைக்கற்றை ஒதுக்கீடும் கிடைத்தது என்றால், BSNL, தனது பொருளாதார நெருக்கடியில் இருந்து விரைவில் மீளும் என்பதை அனைவருக்கும் இந்த சமயத்தில் BSNL ஊழியர் சங்கம் தெரிவிக்க விரும்புகிறது. BSNLன் எதிர்கால நிதி நிலைமை தொடர்பான சந்தேகத்தில் விருப்ப ஓய்வு திட்டத்திற்கு விருப்பம் கொடுத்துள்ள ஊழியர்கள், தற்போது தங்களின் VRSக்கான விண்ணப்பத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்

BSNL Employees Union Nagercoil