BSNLல் உள்ள ஒட்டுமொத்த ஊழியர் மற்றும் அதிகாரிகளின் சங்கங்களையும், குறிப்பாக BSNL ஊழியர் சங்கத்தையும் அதன் தலைவர்களையும் மோசமாக சித்தரிக்கக் கூடிய அருவருக்கத்தக்க WhatsApp செய்திகளை ஒரு சில விஷமிகள் தொடர்ச்சியாக பரப்பி வருகின்றன. BSNL ஊழியர் மற்றும் நிறுவனத்தின் நலன்களை பாதுகாக்க BSNL ஊழியர் சங்கமும், AUABயும் தொடர்ச்சியாக போராடி வருகிறது. இப்படி இருக்கையில், தொழிற்சங்கங்களையும் அதன் தலைவர்களையும் தவறாக சித்தரித்து ஒரு சில விஷமிகள் தொடர்ந்து WhatsApp செய்திகளை வெளியிட்டு வருகின்றன. தொழிற்சங்க இயக்கத்தை பலவீனப்படுத்தி, BSNLல் ஒரு ஒழுங்கற்ற நிலையை உருவாக்கவதுதான் இந்த செய்திகளை வெளியிடுபவர்களின் ஒரே நோக்கம். நேற்றைய தினம், BSNLல் உள்ள தொழிற்சங்க தலைவர்களை டெல்லியில் உள்ள யமுனை நதியில் விழுந்து தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என திட்டி, வரம்பு மீறிய வகையில் ஒரு WhatsApp செய்தி அனுப்பப்பட்டுள்ளது. இது போன்ற முட்டாள்தனங்களை சகித்துக் கொள்ளவும் ஒரு வரம்பு உள்ளது. எனவே, இந்த வரம்பு மீறிய WhatsApp செய்திக்கு எதிராக நடவடிக்கை எடுக்க BSNL ஊழியர் சங்கம் முடிவெடுத்துள்ளது. அதன் அடிப்படையில் BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் P.அபிமன்யு அவர்கள் இன்று, டெல்லி காவல் துறையில் உள்ள CYBER குற்றப்பிரிவின், காவல் துறை துணை கண்காணிப்பாளர் அவர்களிடம் ஒரு புகார் தாக்கல் செய்துள்ளார். அதே போல ஹைதராபாத் CYBER குற்றப்பிரிவில் உதவி பொதுச்செயலாளர் தோழர் J.சம்பத் ராவ் அவர்கள் ஒரு புகார் கொடுத்துள்ளார். இத்துடன் உதவிப் பொதுச்செயலாளர் தோழர் S.செல்லப்பா அவர்களும், சென்னை காவல் துறையில் உள்ள CYBER குற்றப்பிரிவில் ஒரு புகார் கொடுத்துள்ளார். இனிமேல், சமூக வலைத்தளங்களில் BSNL ஊழியர் சங்கத்தையும், அதன் தலைவர்களையும் மோசமாக சித்தரித்து செய்திகளை வெளியிடும் ஒவ்வொரு விஷமிகளுக்கும் BSNL ஊழியர் சங்கம் ஒரு தகுந்த பாடத்தை கற்பிக்கும்.