ஊழியர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க வேண்டும் என AUAB கோரியது. ஆரம்பத்தில் அக்டோபர் மாத ஊதியத்தை 28.11.2019ல் தருவதாக நிர்வாகம் உறுதி அளித்தது. எனினும் தனது உறுதி மொழியை நிர்வாகம் அமலாக்க வில்லை. இதற்கிடையில் இன்றைய தினம் (04.12.2019) அன்று ஆர்ப்பாட்டத்திற்கு அறைகூவல் விடுத்தது. திடீரென, அக்டோபர் மாத ஊதியம் 04.12.2019 அன்று வழங்கப்படும் என நேற்று (03.12.2019) மாலை நமக்கு செய்தி வந்தது. விருப்ப ஓய்வு திட்டத்திற்கான சாளரம் நேற்று, 03.12.2019 அன்று மாலை மூடப்படும் என்பதை நாம் முக்கியமாக கவனிக்க வேண்டும். விருப்ப ஓய்வு திட்டத்தின் சாளரம் மூடிய பின் தான் அக்டோபர் மாத ஊதியம் வழங்க வேண்டும் என நிர்வாகம் விரும்பியதை தான் இது காட்டுகிறது. இது, ஊழியர்களை விருப்ப ஓய்வு திட்டத்தில் செல்ல கடைசி நிமிடம் வரை கட்டாயப்படுத்தும் வகையில் ஊழியர்களை அநியாயமாக நெருக்கடிக்கு உள்ளாவதை தவிர வேறு ஒன்றுமில்லை. நிர்வாகம், தனது நடவடிக்கைகளை நியாயப்படுத்த பல்வேறு கதைகளைக் கூறலாம். ஆனால் நிர்வாகத்தின் நடவடிக்கை, முழுமையாக அம்பலப்பட்டு, அதன் சித்து விளையாட்டை அனைத்து ஊழியர்களும் முழுமையாக புரிந்துக் கொண்டனர். நிர்வாகம், நியாயமற்ற தொழிலாளர் நடைமுறைகளை கடைபிடிக்கிறது என்பதை சொல்லத் தேவையில்லை.
இதற்கு எதிராக இன்றைய ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாக ஊழியர்கள் பங்கேற்றனர். அதன் தமிழக காட்சிகள் சிலவற்றை இணைத்துள்ளோம்.

Loader Loading...
EAD Logo Taking too long?

Reload Reload document
| Open Open in new tab

Download