நாகர்கோவில் PGM அவர்களை 04/12/2019 புதன் கிழமை
மாலை 4 மணிக்கு ஒப்பந்த தொழிலாளர்கள் விசயமாக நான்கு SSA யில் இருந்து
( நாகர்கோவில், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர்)
மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்கள்
கலந்து கொண்டு மகஜர் கொடுக்கப்பட்டது. அதற்கு முன்னால்  மதியம் 3.00 மணிக்கு தென்மாவட்டங்களி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதன் முடிவின் அடிப்படையில் 

1, Work Contract System கொடுத்தால் BSNL யில் தவறுகள் நடக்கும் மற்றும்
இது சட்டபூர்வ சலுகைகள் (EPF,ESI மற்றும் Bonus) முறையாக கிடைக்காது.

2. பணி பாதுகாப்பு இருக்காது மற்றும் வேலைகள் ஒழுங்காக நடக்காது.

3, இப்போது இருக்கும் Tender முறைதான் சரியாக இருக்கும். சட்டரீதியான
Tender முறையாகும்.

4, இப்போது கூட எந்த வித Tenders இல்லாமல் ஒப்பந்த தொழிலாளர்கள்
வேலை பார்த்து வருகிறார்கள். இது தொடர்வதற்கு நீங்கள் முயற்சி எடுக்க வேண்டும். 

மற்றும் 10 மாதங்கள் சம்பளம் இல்லாமல் ஒப்பந்த தொழிலாளர்கள்
வேலை பார்த்து வருகிறார்கள் அவர்களுக்கு சம்பளம் விஷயமாக உங்கள் தரப்பில் முயற்சி எடுக்கவும்.  போன்ற விஷயங்கள் PGM அவர்களிடம் யூனியன் சார்பாக பேசப்பட்டது.

கோரிக்கையை அமைதியாக கேட்டுக்கொண்ட PGM அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்

BSNLஊழியர் சங்கத்தின் நான்கு மாவட்டச் சங்கநிர்வாகிகள் கலந்து கொண்டர்கள். 

மற்றும்  TNTCWU சார்பாக தோழர் செல்வம் மாவட்ட செயலாளர் நாகர்கோவில் மற்றும் தோழர்
அனில்குமார மாநில செயற்குழு உறுப்பினர் கலந்து கொண்டார்கள்.

BSNL Employees Union Nagercoil