ஊழியர்கள் விருப்பப்பட்ட சங்கத்தை ERP மூலமாக தேர்ந்தெடுப்பு:-
BSNL கார்ப்பரேட் அலுவலகம், 06.12.2019 அன்று வெளியிட்ட கடிதத்தில், ஊழியர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப சங்கங்களை தேர்ந்தெடுப்பதை ERP மூலம் செய்ய வேண்டும் என முன்மொழியப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, BSNL ஊழியர் சங்கம் ஏற்கனவே கடிதம் கொடுத்துள்ளது. ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஊழியர்களுக்கு, கணிணி செயல்பாடு தொடர்பாக பரவலான புரிதல் இல்லை என்பதால், ஊழியர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப சங்கங்களை ERP மூலமாக தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிற முன்மொழிவை அமலாக்கக் கூடாது என பொதுச்செயலாளரும், துணை பொதுச்செயலாளரும் GM(SR)இடம் வலியுறுத்தினர். இதனை GM(SR) ஏற்றுக் கொண்டார்.

முறையான சந்திப்பு:- விருப்ப ஓய்வு திட்டத்திற்கு பிந்தைய சூழலில் உருவாகும் சில பிரச்சனைகள் தொடர்பாக விவாதிக்க DIRECTOR(HR) உடன் ஒரு முறையான சந்திப்பு தேவை என BSNL ஊழியர் சங்கம் கோரியிருந்தது. அந்த கூட்டத்தினை விரைவில் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுச்செயலாளரும், துணை பொதுச்செயலாளரும் GM(SR) அவர்களிடம் வலியுறுத்தினர். அதற்கு ஆவன செய்வதாக GM(SR) தெரிவித்தார்.

Sr.GM (Estt) உடன் சந்திப்பு

11.12.2019 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் P.அபிமன்யு மற்றும் தோழர் சுவபன் சக்கரவர்த்தி Dy.GS ஆகியோர், Sr.GM (Estt) திரு சௌரப் தியாகி அவர்களை சந்தித்து கீழ்கண்ட விஷயங்களை விவாதித்தனர்:-

NEPP பதவி உயர்வு- பதவி உயர்வு தேதிக்கு பின்னர் வரும் ஒழுங்கு நடவடிக்கை தொடர்பாக:-
NEPP பதவி உயர்விற்கு பின்னர் வரும் ஒழுங்கு நடவடிக்கைகள், அவரது பதவி உயர்வை பாதிக்கக் கூடாது என வலியுறுத்தி BSNL ஊழியர் சங்கம் ஏற்கனவே கார்ப்பரேட் அலுவலகத்திற்கு கடிதம் எழுதியிருந்தது. அதிகாரிகளுக்கான பதவி உயர்வு திட்டத்திற்கு இதற்கான ஒரு வழிகாட்டுதலை கார்ப்பரேட் அலுவலகம் ஏற்கனவே வெளியிட்டுள்ளது. அதே போன்ற உத்தரவை ஊழியர்களின் பதவி உயர்விற்கும் வழங்க வேண்டும் என BSNL ஊழியர் சங்கம் கோரியது. இது தொடர்பான நடவடிக்கை ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஓரிரு நாட்களில் இதற்கு தேவையான வழிகாட்டுதல்கள் வழங்கப்படும் என Sr.GM(Estt) பதிலளித்துள்ளார்.

நேரடியாக டெலிகாம் டெக்னீசியன்களாக பதவி உயர்வு பெற்ற TSMகளுக்கு PRESIDENTIAL உத்தரவு:- RMகளாக நிரந்தரமாகமலேயே, ஒரு சில TSM தோழர்கள் நேரடியாக டெலிகாம் டெக்னீசியன்(பழைய டெலிகாம் மெக்கானிக்)களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். 01.10.2000க்கு பின்னர் RMகளாக நிரந்தரம் பெற்ற TSMகளுக்கு இணையாக இந்த தோழர்களுக்கும் PRESIDENTIAL உத்தரவு வழங்கப்பட வேண்டும் என BSNL ஊழியர் சங்கம் கோரியது. இந்த பிரச்சனையை ஏற்கனவே DoTக்கு கொண்டு சென்றுள்ளதாக Sr.GM(Estt) பதிலளித்தார். மேலும், இதில் சில விளக்கங்களை DoT கேட்டுள்ளதாகவும், அதற்கான பதில்கள் விரைவில் தரப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

BSNL Employees Union Nagercoil