2017-18ஆம் ஆண்டின் காலிப் பணியிடங்களுக்கு 26.05.2019 அன்று நடைபெற்ற  JTO இலாகா தேர்வின் முடிவுகள் நேற்று (12.12.2019) வெளியிடப்பட்டது.  இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் இல்லாமல், தனது தகுதியின் அடிப்படையில், தேர்வு பெற்ற SC/ST ஊழியர்களை எந்த வகையில் பொருத்துவது என்பது தொடர்பாக DoP&Tயின் வழிகாட்டுதல்களுக்கு முரண்பட்டு, பிரச்சனைகள் ஏற்படுத்தப்பட்ட காரணத்தால் தான் இந்த காலதாமதம் ஏற்பட்டது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
இந்த பிரச்சனையை சரியான புரிதலோடு, தொடர்ச்சியாக நிர்வாகத்திற்கு கடிதங்களை எழுதியதுடன், BSNL ஊழியர் சங்கம், DIRECTOR(HR) மற்றும் GM(HR) ஆகியோரிடம் விவாதித்து வந்தது.
மேலும், அந்த தேர்வில், தவறாக/ பல பதில்கள் உள்ள/ பாடப்பிரிவிற்கு வெளியிலிருந்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு,  முழு மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டும் எனவும் BSNL ஊழியர் சங்கம் கோரிக்கை வைத்தது.
பங்கெடுத்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களில் 154 தோழர்கள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர்.  இதில் OC/ OBC பிரிவில் 112 ஊழியர்களும், 24 SC ஊழியர்களும், 18 ST ஊழியர்களும் தேர்வாகியுள்ளனர்.  அந்தமான், ஆந்திரா, ஜம்மூ காஷ்மீர், இமாச்சல் NE1 மற்றும் உ.பி (மேற்கு) ஆகிய மாநிலங்களில் ஒருவர் கூட வெற்றி பெறவில்லை.  நீதிமன்ற வழக்கின் காரணமாக பஞ்சாப் மாநில முடிவுகள், நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இது போன்று மிகக்குறைந்த எண்னிக்கையிலான போட்டியாளர்கள் வெற்றி பெற்றுள்ளதை சுட்டிக்காட்டி, இந்த தேர்வில் பங்கு பெற்றவர்களுக்கு தகுதி மதிப்பெண்களில் A பிரிவில் 10 மதிப்பெண்களும், B பிரிவில் 15 மதிப்பெண்களும், மொத்தத்தில் 15 மதிப்பெண்களும் தளர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தி BSNL  ஊழியர் சங்கம், CMD BSNLக்கு கடிதம் எழுதியுள்ளது.