மதுரை, டிச.15- தமிழக ஆசிரியர்களின் அன்றாட நடை முறை அலுவல்களில் பாதிப்பை ஏற்படுத்து வதோடு மனஉளைச்சலையும் ஏற்படுத்தும் ‘எமிஸ்’ பதிவேற்ற முறைக்கு தனியாக வட்டார அளவில் ஊழியர் நியமிக்க வேண்டு மென தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொதுச் செயலாளர் ச.மயில் கூறினார்.

‘ஆசிரியர் முழக்கம்’ இதழ் வெளியீடு

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்ட ணியின் சார்பில் ‘டிஎன்பிடிஎப் ஆசிரியர் முழக்கம்’ மாத இதழ் வெளியிட்டு விழா மதுரையில் ஞாயிறன்று நடைபெற்றது.  சங்கத்தின் மாநிலத் தலைவர் மூ. மணிமேகலை தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் – கலைஞர்கள் சங்கத்தின் மாநில கவுரவத் தலைவர் ச.தமிழ்ச்செல்வன் இதழை வெளி யிட அமைப்பின் முன்னாள் மாநிலப் பொதுச் செயலாளர்கள் செ.நடேசன், செ.போத்தி லிங்கம், செ.பாலச்சந்தர், முன்னாள் மாநிலத் தலைவர்கள் கே.ஏ.தேவராஜன், கோ.முரளி தரன் மற்றும் ந.நாகப்பன், ச.ஜீவானந்தம், தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் அ.சங்கர், தமிழ் நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலாளர் பேட்ரிக் ரெய் மாண்ட் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.  முன்னதாக துணைப் பொதுச் செயலா ளர் தா.கணேசன், எஸ்.டி.எப்.ஐ. அகில இந்திய பொதுக்குழு உறுப்பினர் ச.மோசஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநி லப் பொதுச் செயலாளர் ச.மயில் வரவேற்பு ரையாற்றினார்.

பேட்டி

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ச.மயில் கூறியதாவது: தமிழக அரசு 5 மற்றும் 8-ஆம் வகுப்பு களுக்கு பொதுத்தேர்வு என்று அறிவித்துள் ளதை திரும்பப்பெற வேண்டும். இது பிஞ்சுக் குழந்தைகளின் உள்ளத்தில் தேர்வு பயத்தை ஏற்படுத்துவதோடு மாணவர்களின் இடைநிற்றலையும் அதிகரிக்கும். தமிழக அரசு எதிர்காலக் கல்வி வளர்ச்சி கருதி இந்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும்.  பள்ளி தொடர்பான அனைத்துப் புள்ளி விபரங்களையும் கல்வியியல் மேலாண்மை தகவல் மைய இணைய தளத்தில்(எமிஸ்) பதிவேற்ற தலைமை ஆசிரியர்கள், ஆசி ரியர்கள் நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். இத னால் அவர்களின் கல்விப் பணி பாதிக்கப்படு கிறது. எமிஸ் இணைய தள பதிவேற்றத்திற்கு வட்டார அளவில் ஒரு ஊழியரை தமிழக அரசு நியமிக்க வேண்டும்.  ஜாக்டோ- ஜியோ மற்றும் ஆசிரியர் போராட்டங்களில் பங்கேற்றவர்கள் மீதான பழிவாங்கல் நடவடிக்கையை தமிழக அரசு கைவிட வேண்டும். மத்திய அரசின் முற்றி லும் வணிகமயத்தைச்  சார்ந்த தேசிய கல்விக் கொள்கை 2019 குழந்தைகளின் எதிர்காலக் கல்விக்கு பாதகம் விளைவிக்கும். எனவே தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். வருகிற 2020 ஜனவரி 8-ஆம்தேதி நடைபெற உள்ள அகில இந்திய பொது வேலைநிறுத்தத்தில் இந்திய பள்ளி ஆசிரி யர் கூட்டமைப்பில் அங்கமாக உள்ள 10 உறுப்புச் சங்கங்களைச் சேர்ந்த ஒரு லட்சம் ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்க உள்ளனர். இதில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் சுமார் 45 ஆயி ரம் பேர் வேலைநிறுத்தத்தில் பங்கேற்பர். ஆசிரியர்கள் தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற ஜன வரி 4-ஆம்தேதி மாவட்டத் தலைநகரங்களில் தர்ணாப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.