பிஎஸ்என்எல் நிறுவனம் கேரளாவில் தனது பிரீபெய்ட் சலுகை பலன்களை மாற்றியமைத்து இருக்கிறது, அதன்படி இப்போது ரூ.118, ரூ.187, ரூ.399 ப்ரீபெய்ட் சலுகைகளின் வேலிடிட்டி குறைக்கப்பட்டுள்ளது. இதற்குமுன்பு இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் தங்களின் சேவை கட்டணத்தை உயர்த்தின என்பது குறிப்பிடத்தக்கது.
ரூ.118-திட்டம் குறிப்பாக கேரளா மாநிலத்தில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.118-திட்டம் ஆனது, 21 வேலிடிட்டி வசதியுடன் வருகிறது, ஆனால் மாற்ற வட்டாரங்களில் இந்த திட்டத்திற்கு 28நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. பின்பு வேலிடிட்டி தவிர இந்த திட்டத்தில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை, இதனால் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 250நிமிடங்கள் வாய்ஸ் கால், 0.5ஜிபி அதிவேக டேட்டா, பிரத்யேக ரிங் பேக் டோன், தினமும் 100எஸ்எம்எஸ் போன்ற சலுகைகள் வழங்கப்படுகிறது.

ரூ.187 திட்டம் அதன்பின்பு ரூ.187 திட்டத்தின் வேலிடிட்டியும் 28நாட்களில் இருந்து தற்சமயம் 24நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது, இந்த திட்டத்தில் தினமும் 250நிமிடங்கள் வாய்ஸ் கால், 3ஜிபி அதிவேக டேட்டா, பிரத்யேக ரிங் பேக் டோன், தினமும் 100எஸ்எம்எஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
 ரூ.153 திட்டம் அடுத்து பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.153ப்ரீபெய்ட் திட்டத்தில் 1.5ஜிபி டேட்டா,21நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது, முன்னதான இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28நாட்கள் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.399 திட்டம் மேலும் இதேபோன்று ரூ.399 திட்டத்தின் வேலிடிட்டி 65 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. இதே திட்டம் மற்ற வட்டராங்களில் 80நாட்கள்வேலிடிட்டி வழங்குகிறது. எனினும் டேட்டா அளவு தினசரி 1ஜிபியில் இருந்து தற்சமயம் தினமும் 2ஜிபியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.இத்துடன் 250நிமிடங்கள் வாய்ஸ் கால், பிரத்யேக ரிங் பேக் டோன், தினமும் 100எஸ்எம்எஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

BSNL Employees Union Nagercoil