”குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடுபவர்களின் உடையை மக்கள் பார்க்க வேண்டும். அவர்கள் யார் என உங்களுக்கு புரியும்” என பாரத பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். மேலும் நகர் புற நக்சலைட்டுகளால் போராட்டங்கள் தூண்டி விடப்படுகிறது என செய்திகள் பரப்பப்படுகிறது. இந்த அறிக்கைகள் அனைத்தும் பிரச்சனையை திசை திருப்பும் தந்திரங்களே தவிர வேறு எதுவும் இல்லை. குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்ப்பவர்கள் யார் யார் என்பதை நாம் பார்ப்போம்.

ராமச்சந்திர குஹா:- இவர் வரலாற்று ஆராய்ச்சியாளர் மற்றும் பிரபல எழுத்தாளர். இவர் பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

யோகேந்திர யாதவ்:- “சுதந்திரத்திற்கு பின் நாட்டில் முதல் முறையாக, நமது குடியுரிமை மதத்துடன் இணைக்கப்பட்டுள்ளது”.

சேத்தன் பகத், பிரபல எழுத்தாளர்:- “குடியுரிமை திருத்த சட்டம் ஒரு உயிர் காக்கும் கருவி. ஆனால் அந்த உயிர்காக்கும் கருவி இஸ்லாமியர்களுக்கு வழங்கப்படவில்லை. உயிர் காக்கும் கருவியை பிரித்துக் கொடுப்பதில் தவறில்லை. ஆனால் ஒரு சிலருக்கு மட்டும் வழங்கிவிட்டு மற்ற அனைவரையும் விமானத்தில் இருந்து தள்ளி விடுவது தான் பிரச்சனை”

திரைப்பட நடிகர் கமல்ஹாசான்:- ” இந்தியாவின் சிந்திக்கும் மற்றும் கேள்வி கேட்கும் மனங்களான ராம் குஹா மற்றும் யோகேந்திர யாதவ் போன்றவர்களை கைது செய்வதன் மூலம் சத்யாகிரக நெருப்பில் எண்ணையை ஊற்றும் அரசின் முட்டாள் தனத்தை பார்த்து கைதட்டி மகிழ்கிறேன்”

பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், ஜாமியா மிலியா பல்கலை கழக மானவர்கள் மீதான தாக்குதலுக்கு தனது அதிர்ச்சியை தெரிவித்துள்ளார். அந்த தாக்குதலில் ஒரு மாணவர் தனது கண்ணை இழந்துள்ளார். “மனிதநேயம் மிக்கவர் என்பது தான் அவர் செய்த குற்றம்” என ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

பிரியங்கா சோப்ரா:- “அமைதியாக ஒருவர் குரலை எழுப்பியதால் தாக்குதலுக்கு உள்ளாவது என்பது வெற்றிகரமான ஜனநாயகத்தில் தவறு. ஒவ்வொரு குரலையும் மதிக்க வேண்டும். ஒவ்வொரு குரலும் இந்தியாவின் மாற்றத்திற்காக செயல்படும்”

-டைம்ஸ் ஆஃப் இந்தியா (20.12.2019)