BSNL ஊழியர் சங்கம் மற்றும் BSNL CMD ஆகியோருக்கு இடையே, BSNLன் செயல் திறனையும், உற்பத்தி திறனையும் எவ்வாறு அதிகரிப்பது என்பது தொடர்பாக ஒரு சிறிய, ஆனால் செறிவான விவாதம் 17.12.2019 அன்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் BSNL நிறுவனம் விரைவில் லாபமீட்டுவதற்காக, அதன் செயல் திறனையும், உற்பத்தி திறனையும் மேம்படுத்துவதற்கு BSNL ஊழியர் சங்கத்தின் ஒத்துழைப்பை நமது தலைவர்களிடம் CMD BSNL கோரினார். BSNLன் செயல்திறனையும், உற்பத்தி திறனையும் அதிகரிக்கும் விஷயத்தில் CMD BSNLஉடன் BSNL ஊழியர் சங்கம் முழுமையாக துணை நிற்கும் என நமது தலைவர்கள் கூறினர். சேவையின் தரம், வாடிக்கையாளர் திருப்தி மற்றும் வேலை கலாச்சாரம் ஆகியவற்றினை மேம்படுத்த “வாடிக்கையாளர் மகிழ்விப்பு வருடம்”, “புன்முறுவலுடன் கூடிய சேவை” உள்ளிட்ட இயக்கங்களை BSNLல் உள்ள அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கங்கள் கடந்த காலங்களில் நடத்தியுள்ளன என்பதையும் அவர்கள் CMD BSNLக்கு சுட்டிக்காட்டினர். ஊழியர்களை ஊக்கப்படுத்துவதன் மூலமாக தான் அவர்களின் செயல்திறனையும், உற்பத்தி திறனையும் மேம்படுத்த முடியும் என அவர்கள் CMD BSNLஇடம் உறுதி பட தெரிவித்தனர். அதனை கூறும்போது நமது பொதுச்செயலாளர் தோழர் P.அபிமன்யு அவர்கள் ஆங்கிலத்தில் உள்ள கீழ்கண்ட சொலவடையை சுட்டிக்காட்டினார்.
“ A CAPTAIN ORDERS, BUT A LEADER INSPIRES”. இதனை தமிழில்’ “தலைமை பண்பு என்பது உத்தரவிடுவதல்ல, ஊக்கமளித்து மக்களை செயல்படுத்துவது” என்றும் சொல்லலாம்.
இவ்வாறு, CMD BSNL, கார்ப்பரேட் அலுவலக ஊழியர்கள் மத்தியில் 25.10.2019 அன்று பேசிய தீபாவளி பேச்சு, ஊழியர்களின் செயல் திறனையும், உற்பத்தி திறனையும் மேம்படுத்த உதவாது என்றும் அவர் ஊழியர்களை ஊக்குவிக்க வேண்டும் என்றும் மறைமுகமாக BSNL ஊழியர் சங்கம், CMD BSNLஇடம் தெரிவித்துள்ளது. இந்த விஷயத்தில் முன்னாள் BSNL CMD திரு அனுபம் ஸ்ரீவாஸ்தவா அவர்களின் சாதகமான செயல்பாட்டை BSNL ஊழியர் சங்கம் நினைவு படுத்தியது.

BSNL Employees Union Nagercoil