ரூ.1,999 திட்டம் அறிமுகம் பிஎஸ்என்எல் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகைகளை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. இந்த திட்டம் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், அரசு நடத்தும் தொலைத் தொடர்பு ஆபரேட்டர் நிறுவனமான பிஎஸ்என்எல் ரூ.1,999 திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டம் இன்று (டிசம்பர் 25) முதல் ஜனவரி 31, 2020 வரை கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 3 ஜிபி கூடுதல் டேட்டா, ஒரு நாளுக்கு 100 எஸ்எம்எஸ்களை 425 நாட்களுக்கு வழங்குகிறது.

பிஎஸ்என்எல் டிவி ஆப் பிஎஸ்என்எல் அறிவிப்பின்படி ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள் மட்டுமே பிஎஸ்என்எல் டிவி அணுகல் கிடைக்கிறது. இந்த ஆப் வரம்பற்ற இசை, திரைப்படங்கள், க்ரைம் டாக்யூமென்ட் என பல்வேறு நிகழ்ச்சிகளை வழங்குகிறது. எஸ்.எஸ்.டி.வி 97, எஸ்.டி.வி 365, எஸ்.டி.வி 399, எஸ்.டி.வி 997, எஸ்.டி.வி 998 மற்றும் எஸ்.டி.வி 1999 ஆகிய ஆறு ப்ரீபெய்ட் எஸ்.டி.விகளின் வழியாக ஒருவர் பிஎஸ்என்எல் டிவி சந்தாவைப் பெறலாம்.

டிவி ஆப் சேவை முறை

இந்த ஆப் ஆனது வீடியோ-ஆன்-டிமாண்ட் சேவையாக மட்டுமே செயல்படுவதால், லைவ் டிவி சேவை இதில் கிடையாது. குறிப்பாக மேலே வழங்கப்பட்டுள்ள ரூ.1999 திட்டத்தை தேர்ந்தெடுத்தால் 425 நாட்களுக்கு இலவசமாக டிவி அணுகல்களை பெறலாம். இந்த ஆப் ஆனது தமிழ், பஞ்சாபி, போஜ்புரி, ராஜஸ்தானி, இந்தி, ஒடியா, தெலுங்கு, மலையாளம், பெங்காலி மற்றும் ஹரியானா உள்ளிட்ட மொழிகளில் கிடைக்கிறது.

BSNL Employees Union Nagercoil