ரயில்வேயில் பணியாற்று பவர்களை வெளியேற்ற முயற் சிக்கும் அதே வேளையில் புதிதாக வேலைக்கு ஆட்களை எடுப்ப தில்லை என மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக டிஆர்இயு மத்திய சங்க துணைத் தலைவர் இளங் கோவன் தெரிவித்தார். மதுரையில் சனிக்கிழமை நடை பெற்ற டிஆர்இயு-வின் பொதுமகா சபைக் கூட்டத்தில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியதா வது:- “பரிவர்த்தன் சங்கோஷ்டி” கூட்டம் புதுதில்லியில் டிச.7-ஆம் தேதி நடைபெற்றது. இதில் ரயில்வே அமைச்சர், ரயில்வே வாரிய உறுப்பி னர்கள், பொதுமேலாளர்கள், கோட்ட மேலாளர்கள் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் பேசிய ரயில்வே அமைச்சர், ஊழியர்களின் எண் ணிக்கையை 30 சதவீதம் குறைக்க வேண்டும். விருப்ப ஓய்வு என்ற அடிப்படையில் 50 சதவீத ஊழியர் களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டுமென வழிகாட்டியுள்ளார். இது ரயில்வேயை அழித்தொழிக் கும் நடவடிக்கை மட்டுமல்ல. இளைஞர்களின் வேலைவாய்ப்புக் கனவையும் பறிப்பதாகும். ரயில்வேயில் சுமார் 2 லட்சத்து 60 ஆயிரம் காலிப்பணியிடங்கள் உள்ளன. இதில் 1 லட்சத்து 30 ஆயி ரம் பணியிடங்களை நிரப்ப விண் ணப்பங்கள் கோரப்பட்டு லட்சக்க ணக்கானோர் விண்ணப்பித்துள்ள னர். “பரிவர்த்தன் சங்கோஷ்டி” கூட்ட முடிவின்படி பார்த்தால்  1 லட்சத்து 30 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப் படாது என்று தான் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.

கட்டண உயர்வு அநியாயம் ரயில்வே நிர்வாகம் பயணிகள் போக்குவரத்துக் கட்டணத்தை ஒரு கிலாமீட்டருக்கு ஐந்து பைசா முதல் நாற்பது பைசா வரை உயர்த்தத் திட்டமிட்டுள்ளது. இது நியாயமற்றது. ரயில்வேத் துறை யைப் பொறுத்தமட்டில் இந்தியா மட்டுமல்ல உலகநாடுகள் அனைத் திலும் பயணிகள் ரயில் போக்கு வரத்து நஷ்டத்தில் தான் இயங்கு கிறது. சரக்குப் போக்குவரத்துக் கட்டணம் அதை ஈடு செய்கிறது. அமெரிக்கா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் பயணிகள் ரயில் போக்குவரத்தில் ஏற்படும் நஷ் டத்தை ஈடுகட்ட அரசு நிதி கொடுத்து உதவுகிறது. இந்தியாவில்  பயணிகள் போக்கு வரத்தில் ஆண்டொன்றுக்கு ரூ.37 ஆயிரம் கோடி நஷ்டமேற்படுகிறது,

குளிர்சாதன வசதி செய்யப்பட்ட பெட்டிகளில் பயணிப்போர் மூலமே ஓரளவு வருமானம் வருகிறது.  ஆனால், அதே நேரத்தில் சரக்குப் போக்குவரத்தில் ரூ.39 ஆயிரம் கோடி ரயில்வே லாபம் ஈட்டியுள் ளது. பயணிகள் போக்குவரத்தை ஒரு சேவையாகப் பார்க்க வேண் டுமே தவிர வர்ததகமாகப் பார்க்கக் கூடாது. இழப்பை சரிக்கட்ட மத்திய அரசு நிதி வழங்கவேண்டும். உல கில் பல நாடுகள் பயணிகள் போக்கு வரத்தில் ஏற்படும் இழப்பை சரிக் கட்ட நிதி வழங்குகின்றன. ஆனால், இந்தியாவில் வழங்கப்படுவ தில்லை. புதிய திட்டங்களுக்கு ரூ.45  ஆயிரம் கோடி வரை வழங்கும் அரசு ரயில்வேயின் அன்றாடத் தேவை களுக்கு பணம் வழங்குவதில்லை. ரயில்வே துறையை சீரமைப்பு செய்கிறோம் என்ற பெயரில் எட்டு துறைகளை ஐந்து துறைகளாக மாற்ற உத்தேசித்துள்ளது. ரயில்வே வளர்ச்சிக்கழகம் என்ற அமைப்பை உருவாக்கி தனியா ருக்கு ரயில்களை இயக்க அனுமதி வழங்கியுள்ளது. இதே போல் ரயில்வே உற்பத்தி மனைகள், பணி மனைகளை ஒருங்கிணைத்து Railway Rolling stock corporation என்ற அமைப்பை உருவாக்கி அதை தனியாருக்கு தாரை வார்க்க உத்தே சித்துள்ளது. இது அபாயகரமானது. மத்திய அரசின் மக்கள் விரோ தக் கொள்கைளை எதிர்த்துப் போராடி வரும் ரயில்வே தொழி லாளர்கள் தங்களது துறையையும் பாதுகாக்கவேண்டும். தேசத்தைப் பாதுகாக்க வேண்டுமென்ற உணர் வோடு வருகிற ஜன.8-ஆம் தேதி நடைபெற உள்ள வேலை நிறுத் தத்தை ஆதரித்து ஆதரவு ஆர்ப் பாட்டம் நடத்த உள்ளனர் என்றார்.

BSNL Employees Union Nagercoil