ஆண்டின் முதல் நாளிலேயே சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை, 19 ரூபாய்  வரை உயர்த்தி மோடி அரசு மக்களை அச்சுறுத்தியுள்ளது. இதன்மூலம், ஆகஸ்ட் மாதத்தில் துவங்கிகடந்த 5 மாதத்தில் மட்டும், மானியமல்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை,மொத்தம் 140 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள் ளது. அதாவது, சராசரியாக ஒவ்வொரு மாதமும் சிலிண்டர் விலை 25 சதவிகிதம் உயர்த்தப்பட்டு வந்துள்ளது.

மத்திய அரசு ஒவ்வொரு குடும்பத் துக்கும் 14.2 கிலோ எடை கொண்ட 12 சிலிண்டர்களை மானிய விலையில் ஓர் ஆண்டுக்கு வழங்குகிறது. இந்த 12 சிலிண்டர்களுக்கு மேல் தேவைப்படுவோர் வெளிச்சந்தை விலையில் வாங்கிக் கொள்ளலாம்.இதன்படி 14.2 கிலோ எடை கொண்ட மானியமல்லாத சிலிண்டர் விலை ‘புத்தாண்டு பிறந்த நள்ளிரவில் 19 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. (இதுவே 19 கிலோ எடைகொண்ட சிலிண்டர் விலை ரூ. 30 உயர்த்தப்பட்டுள்ளது).இதன்மூலம் தில்லியில் ரூ. 695-க்கு விற்கப்பட்ட மானியமல்லாத 14.2 கிலோ சிலிண்டர் விலை 714 ரூபாயாக விலை அதிகரித்துள்ளது. மும்பையில் ரூ. 695 ஆகவும், கொல்கத்தாவில் ரூ. 747 ஆகவும், சென்னையில் ரூ. 734 ஆகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து, 5 மாதங்களில் மட்டும் மானியமல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தில்லியில் 139 ரூபாய் 50 காசுகளும், மும்பையில் 138 ரூபாயும் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.மண்ணெண்ணெய் விலையும் லிட்டருக்கு 26 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலையை போல், நாள்தோறும் மாற்றாமல், மாதத்திற்கு ஒருமுறைதான் எரிவாயு விலையை உயர்த்துகிறோம் என்று சந்தோஷப்பட்டுக் கொள்ளுங்கள் என்ற ரீதியாக மத்திய அரசு இந்த விலை உயர்வை அமல்படுத்தி யுள்ளது.

BSNL Employees Union Nagercoil