BSNL ஊழியர் சங்கத்தின் அகில இந்திய தலைவர் தோழர் அனிமேஷ் மித்ரா மற்றும் தோழர் சுவபன் சக்கரவர்த்தி Dy.GS ஆகியோர் 03.01.2020 அன்று GM(Rectt) திருமிகு சமிதா லுத்ரா அவர்களை சந்தித்து, JE இலாகா தேர்வு நடத்தாதது தொடர்பான தங்களின் கடும் அதிருப்தியை தெரிவித்தனர். மார்ச், 2019ல் நடைபெறுவதாக இருந்த இந்த தேர்வு தள்ளி போனதிற்கு பின்பு, நிர்வாகம் அந்த தேர்வை நடத்துவதற்கு எந்த ஒரு முயற்சியும் மேற்கொள்ளவில்லை. நமது தலைவர்கள் அந்த தேர்வை உடனடியாக நடத்த வேண்டும் என்று கோரினர். இதற்கு GM(Rectt) பதிலளிக்கையில், கார்ப்பரேட் அலுவலகத்தின் ESTABLISHMENT பிரிவின் ஆலோசனையுடன் இந்த தேர்வு நடைபெறுவதற்கு தேவையானவற்றை நிர்வாகம் செய்யும் என்று தெரிவித்தார்.

BSNL Employees Union Nagercoil