BSNL ஊழியர் சங்கத்தின் அகில இந்திய தலைவர் தோழர் அனிமேஷ் மித்ரா மற்றும் தோழர் சுவபன் சக்கரவர்த்தி Dy.GS ஆகியோர் 03.01.2020 அன்று DoTயில் உள்ள ESTABLISHMENT பிரிவு அதிகாரிகளை சந்தித்து கீழ்கண்ட பிரச்சனைகளை விவாதித்தனர்.

01.10.2000க்கு பின் நிரந்தரம் பெற்ற TSMகளுக்கு நான்கு ஆண்டுகள் முடிந்தவுடன் முதல் NEPP பதவி உயர்வு வழங்குதல்:-
29.09.2000 வரை TSMகளாக இருந்து 01.10.2000க்கு பின் நிரந்தரமானவரகளை DoTயில் பணியமர்த்தப்பட்டவர்களாக நடத்த வேண்டும் என DoTயின் MEMBER (SERVICES) அவர்கள் 06.02.2019 அன்றே BSNLக்கு பதில் அனுப்பப்பட்டதாக DoT நமது சங்க தலைவர்களிடம் தெரிவித்தது. NEPP பதவி உயர்வு கொடுப்பதை பொருத்தவரை, அந்த கொள்கையை உருவாக்கியது BSNL நிறுவனம் தான். அத்தகைய ஊழியர்களுக்கும் பதவி உயர்வு கொடுக்க வேண்டும் என BSNL நிறுவனம் கருதுமென்று சொன்னால், அவர்கள் தான் அந்த கொள்கையில் மாற்றம் கொண்டு வர வேண்டும். அதில் DoT செய்வதற்கு ஒன்றுமில்லை. மேலும் இதே விஷயம் தொடர்பாக, BSNL மேலும் ஒரு கடிதம் எழுதியது. அதற்கும், DoTயின் நிலைபாட்டை விளக்கி 17.09.2019 அன்றே DoT பதிலளித்துள்ளது. மேலும் இந்த விஷயத்தில், பல CAT மற்றும் உயர் நீதிமன்றங்கள் தீர்ப்பளித்துள்ளது. அவற்றிற்கு எதிராக BSNLன் SLPயை உச்ச நீதிமன்றம் நிராகரித்து விட்டது. எனவே, DoT எழுதியுள்ள பழைய கடிதங்களின் அடிப்படையில், மேலும் நீதிமன்ற வழக்குகளை தவிர்க்க, இந்த விஷயத்தில் BSNL ஒரு உடன்பாட்டிற்கு வரவேண்டும் என்றும் DoT கருதுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

01.10.2000க்கு பின் டெலிகாம் மெக்கானிக்குகளாக நேரடியாக பதவி உயர்வு பெற்றுள்ள TSMகளுக்கு ஜனாதிபத்திய உத்தரவு வழங்குவது:-
மேற்கண்ட விஷயத்தில், 2017ஆம் ஆண்டில் BSNLஇடம் சில விளக்கங்களை DoT கோரியுள்ளதாக DoT அதிகாரிகள் தெரிவித்தனர். இதுவரை BSNL நிறுவனம் DoTக்கு தகவலை கொடுக்கவில்லை. BSNLலிடம் இருந்து பதில் வந்தவுடன் DoT, இந்த பிரச்சனையில் முடிவெடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

கேரள உயர் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், DoTயால் 01.10.2000க்கு முன் தெரிவு செய்யப்பட்டு, BSNLஆக மாறியபின் பணியில் சேர்ந்தவர்களை DoTயால் பணியமர்த்தப்பட்டு BSNLல் Absorb ஆனவர்களாக கருத வேண்டும்:-
ராஜஸ்தானை சேர்ந்த திரு பவன் குமார் தாக்கல் செய்ப்பட்ட மனு உச்சநீதிமன்ற வழக்கு எண் CL51/2016ன் படி நிலுவையில் உள்ளதால், 2012ஆம் ஆண்டு முதல் SUB-JUDICE ஆக உள்ளது என DoTஅதிகாரிகள் தெரிவித்தனர். இதில் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வை உச்சநீதிமன்றம் உருவாக்க வேண்டும். அது இன்னமும் முடிவு செய்யப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

BSNL Employees Union Nagercoil