நீலாச்சல் இஸ்பேட்டில் உள்ள 6 பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்வதற்கு, நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.கடந்த 2014-ஆம் ஆண்டு, ஆட்சிக்கு வந்தது முதலே, பொதுத்துறைநிறுவனங்களைத் தனியார்மயமாக் கும் வேலையில் மத்திய பாஜக அரசுமுழுவீச்சில் உள்ளது.

கோடிக்கணக்கான மக்களின் நலன் சம்பந்தப்பட்ட ரயில்வே துறை,பாரத் பெட்ரோலியம் கார்ப்பொரேசன்துவங்கி, ஆயுதத் தளவாடத் தொழிற்சாலைகள், ‘ஏர் இந்தியா’ விமான நிறுவனம், விமான நிலையங்கள் என எதையும் விட்டு வைக்கவில்லை. இதனொரு பகுதியாகவே, நீலாச்சல் இஸ்பேட்டில் பங்குதாரராக உள்ள 6 பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்க முடிவு செய்துள்ளது.நீலாச்சல் இஸ்பேட் நிகாம் லிமிடெட் (NINL) என்பது ஒரு கூட்டு நிறுவனமாகும், இதில் உலோகம் மற்றும்தாதுக்கள் வர்த்தக கழகம் (MMTC), தேசிய கனிம மேம்பாட்டுக் கழகம் (NMDC), பாரத் மிகுமின் நிறுவனம் (BHEL), உலோகவியல் மற்றும் பொறியியல் ஆலோசனைக் கழகம்(MECON) ஆகிய 4 மத்திய பொதுத் துறை நிறுவனங்களும், ஒடிசா சுரங்கக்கழகம் (OMC), ஒடிசா முதலீட்டுக் கழகம் (IPICOL) ஆகிய ஒடிசா மாநில அரசுபொதுத்துறை நிறுவனங்களும் பங்குதாரர்களாக உள்ளன.

நீலாச்சல் இஸ்பேட் நிகாம் லிமிடெட்டில், எம்எம்டிசி 49.78 சதவிகிதம்,ஓஎம்சி 20.47 சதவிகிதம், ஐபிஐகோல் 12 சதவிகிதம், என்எம்டிசி 10.10 சதவிகிதம், மெக்கான் மற்றும் பிஎச்இஎல்ஆகியவை தலா 0.68 சதவிகிதம் என்றுபங்குகளைக் கொண்டிருக்கின்றன.இந்த பங்குகளை விற்பதற்குத் தான் மத்திய அமைச்சரவை தற்போதுஒப்புதல் அளித்துள்ளது.தனியார்மயத்தை கைவிட வேண்டும்; பொதுத்துறைகளை பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்டகோரிக்கைகளை முன்வைத்து, புதனன்று நாடு தழுவிய பொதுவேலைநிறுத்தம் நடைபெற்றது. கோடிக் கணக்கான தொழிலாளர்கள் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்.ஆனால், அதே நாளிலேயே 6 பொதுத்துறை நிறுவனப் பங்குகளை தனியாருக்கு தருவதென்று மோடி அரசு முடிவெடுத்துள்ளது.இதற்காக, தாதுப்பொருட்கள் சட்டத்தைத் திருத்தி அவசரச் சட்டம் பிறப்பிக்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.