ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கும் வருங்கால வைப்பு நிதி (பி.எப்) தொகையை பெறும் உரிமை உண்டு என்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கும் நிரந்தரத்தொழிலாளர்களுக்கும் இடையே வேறுபாடு கூடாது என்றும் அவர்களுக்கும் எதிர்கால பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.  இதுதொடர்பான வழக்கில் பொதுத்துறை நிறுவனமான பவன் ஹன்ஸில் பணியாற்றும் அனைத்து ஒப்பந்தத் தொழிலாளர்களையும் தொழிலாளர் வைப்பு நிதியின் கீழ் கொண்டுவர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. தொழிலாளர் சீர்திருத்தச் சட்டங்களில் மாற்றம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.  இதற்கான வரைவு மசோதா நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் உச்சநீதிமன்றம் இத்தகைய கருத்தை கூறியுள்ளது.

BSNL Employees Union Nagercoil