இந்தியாவில் உள்ள 95.30 கோடி மக்கள் அதாவது 70 சதவீத மக்களிடம் இருக்கும் சொத்து மதிப்புக்கு இணையாக உள்ள நாட்டில் உள்ள ஒரு சதவீத பெருங்கோடீஸ்வரர்களிடம் சொத்து உள்ளது என்று உலக பொருளாதார கூட்டமைப்பு(டபிள்யு இ எப்) அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் உள்ள ஒரு சதவீத கோடீஸ்வரர்களிடம் இருக்கும் சொத்துக்களை வைத்து ஒரு ஆண்டுக்கும் அதிகமான மத்திய பட்ஜெட்டை தயாரிக்க முடியும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்விட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் உலக பொருளாதாரக் கூட்டமைப்பின் 50-வது ஆண்டுக் கூட்டம் இன்று தொடங்குகிறது. அதற்கு முன்பாக, பொதுநல அமைப்பான ஆக்ஸ்பாம் வெளியிட்ட அறிக்கையில், இந்த பூமியில் உள்ள 60 சதவீத மக்கள் அதாவது 450 கோடி மக்களிடம் இருக்கும் சொத்துக்கு இணையாக உலக அளவில் உள்ள 2 ஆயிரத்து 153 கோடீஸ்வரர்களின் சொத்து இருக்கிறது.

உலக அளவில் ஆப்பிரிக்கக் கண்டத்தில் வசிக்கும் அனைத்து பெண்களிடம் இருக்கும் சொத்து மதிப்பு, உலகளவில் 22 பெரும் பணக்காரர்களிடம் இருக்கிறது.

உலகில் மக்களிடையே சமத்துவமின்மை தொடர்ந்து அதிகரித்து வருவதும் இடைவெளி விரிவடைந்து வருவதும், கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை பெருகிவருவதும் அதிர்ச்சியாக இருக்கிறது. உலகப் பொருளாதார கூட்டமைப்பின் 5 நாட்கள் கூட்டத்தில் மக்களின் வருமானம், சமத்துவமின்மை ஆகியவை முக்கிய பேசு பொருளாக இருக்கும், அதிகமாக விவாதிக்கப்படும்.

BSNL Employees Union Nagercoil