தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அதன் வருவாய் பகிர்வு (ஏஜிஆர்) அடிப்படையில் அரசுக்குச் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகைக்கான காலக்கெடு நேற் றோடு முடிந்தது. பார்தி ஏர்டெல், வோடஃபோன் ஐடியா நிறு வனங்கள் கூடுதல் கால அவகாசம் கேட்டு தொலைத் தொடர்புத் துறை யிடம் வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில், ஜியோ நிறுவனம் மட்டும் நேற்று அதன் நிலுவைத் தொகையை செலுத்தியுள்ளது.

தொலைத் தொடர்பு நிறு வனங்கள் அலைக்கற்றை பயன்பாடு, உரிமம் தொடர்பாக அதன் வருவாய் அடிப்படையில் அரசுக்கு குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும். அந்த வகை யில் பார்தி ஏர்டெல், வோடஃபோன் ஐடியா உள்ளிட்ட தொலைத் தொடர்பு நிறுவனங்கள் ரூ.1.47 லட்சம் கோடி அரசுக்கு செலுத்த வேண்டும். அதற்கான காலக் கெடு நேற்றோடு முடிந்தது. இந் நிலையில் ஜியோ நிறுவனம் மட்டும் அதன் நிலுவைத் தொகை ரூ.195 கோடியை நேற்று செலுத்தி உள்ளது.

உத்தரவு வரும் வரை

ஏஜிஆர் விவகாரம் தொடர்பாக, பார்தி ஏர்டெல் மற்றும் வோடஃபோன் ஐடியா உச்ச நீதிமன்றத்தில் திருத்த மனு தாக்கல் செய்துள்ளன. அம்மனு மீதான இறுதி விசாரணை அடுத்த வாரம் நடைபெற உள்ளது. இந் நிலையில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு வரும்வரை நிலுவைத் தொகையை செலுத்த கால அவகாசம் வழங்க வேண்டும் என்று அந்நிறுவனங்கள் தொலைத் தொடர்புத் துறையை கேட்டுக் கொண்டுள்ளன. இந்நிலை யில், அந்நிறுவனங்களின் வேண்டு கோளை ஏற்று, தொலைத் தொடர்புத் துறை நேற்று கால அவகாசம் அளித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு வரும் வரை அந்நிறுவனங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்றும் தெரிவித்து உள்ளது.

வருவாய் பகிர்வுத் தொகையை ஜனவரி 23-க்குள் செலுத்த வேண்டும் என்று கடந்த அக்டோபர் மாதம் 24-ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

வோடஃபோன் ஐடியா ரூ.53,039 கோடி, ஏர்டெல் ரூ.35,586 கோடி அளவில் நிலுவை வைத்துள்ளன.

BSNL Employees Union Nagercoil