சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் CITUவின் 16ஆவது அகில இந்திய மாநாட்டில் தோழமை சங்க பிரதிநிதியாக பங்கேற்றுள்ள BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் P.அபிமன்யு 25.01.2020 அன்று உரை நிகழ்த்தினார்.

அவர் தனது உரையில், நரேந்திர மோடி அரசாங்கத்தின் கொள்கைகள், BSNL ஐ மட்டுமல்லாது, ஒட்டு மொத்த தொலை தொடர்பு துறையையே எவ்வாறு சீரழித்துள்ளது என்பதை விளக்கமாக தெளிவு படுத்தினார். மோடி அரசாங்கத்தின் கொள்கைகள் காரணமாக, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மட்டுமே பயன் அடைந்துள்ளதை விளக்கி, அது சலுகை சார் முதலாளித்துவத்தின் மிகச் சரியான உதாரணம் என்றும் தெரிவித்தார்.

BSNLஐ பாதுகாக்க, அதில் உள்ள ஊழியர் மற்றும் அதிகாரிகளின் சங்கங்கள் ஒன்றாக இணைந்து நடத்திய போராட்டங்களையும், அவர் தெளிவாக விவரித்தார். BSNL ஊழியர்கள் மீது எவ்வாறு விருப்ப ஓய்வு திட்டம் எவ்வாறு திணிக்கப்பட்டது என்பதை விளக்கியதோடு, நாட்டின் பொதுத்துறைகளை பாதுகாக்கும் போராட்டங்களில், CITU சங்கத்தோடும், இதர மத்திய தொழிற்சங்கங்களோடும், BSNL ஊழியர் சங்கம்தோளோடு தோள் நின்று போராடும் என உறுதி அளித்தார். BSNL ஊழியர் சங்கத்தின் அகில இந்திய தலைவர் தோழர் அனிமேஷ் மித்ரா மற்றும் BSNL CCWFஐ சார்ந்த தோழர் அருப் சர்க்கார் ஆகியோரும் மேற்கு வங்காள மாநில பிரதிநிதிகளாக இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.

BSNL Employees Union Nagercoil