கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி மத்தியபட்ஜெட்டைத் தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், புதிய வருமான வரித் திட்டம் என ஒன்றை அறிமுகப்படுத்தினார். பழைய வருமான வரித் திட்டமும் எப்போதும் போல தொடரும் என்று தெரிவித்த அமைச்சர், வரி செலுத்துவோர் இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுக்கலாம் என ‘சலுகை’ காட்டினார்.2020-21 நிதியாண்டில் வருமான வரிசெலுத்தும் 80 சதவீதம் பேர், தங்களின் புதிய திட்டத்திற்கு மாறி விடுவார்கள் என்றும் தற்போது அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.ஆனால், பழைய வரித் திட்டத்தில் உள்ள வரி விலக்குகளை அடியோடு ஒழித்துக் கட்டுவதற்காகவே, புதியதிட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந் துள்ளன.

அதாவது, புதிய வரித் திட்டத்தில்: 2.5 லட்சம் வரை வருமானம் இருந்தால் வரிகிடையாது; ரூ. 2.5 முதல் ரூ. 5 லட்சம் வருவாய்க்கு 5 சதவிகிதம் வரி செலுத்த வேண்டும். இது ஏற்கெனவே உள்ளதுதான்.ஆனால், 5 லட்சத்திற்கு மேலான வருவாயையும், அதற்கான வரியையும் நான்கைந்து வரம்புகளுக்குள் மோடி அரசு கொண்டு சென்றுள்ளது.ரூ. 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை என்றிருந்த வரம்பு, ரூ. 5 லட்சம் முதல் 7.5 லட்சம்; ரூ. 7.5 லட்சத்திலிருந்து ரூ.10லட்சம் வரை என்று இரண்டாக பிரிக்கப் பட்டு, இதற்கான வரி முறையே 10 சதவிகிதம் மற்றும் 15 சதவிகிதம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது முன்பு மொத்தமாக 20 சதவிகிதம் என்றிருந்தது.அதேபோல முன்பு, 10 லட்சத்திற்கு மேல் வருமானம் ஈட்டினால் 30 சதவிகிதம் வரி என்றிருந்தது. அதனை உடைத்து,ரூ.10 லட்சம் முதல் 12.50 லட்சம் வரை வருவாய் ஈட்டினால், அவர்களுக்கு 20 சதவிகிதம் வரி, 12.50 லட்சத்திற்கு மேல் 15 லட்சம்வரை வருவாய் ஈட்டுவோருக்கு 25 சதவிகித வரி; 15 லட்சத்திற்கு மேல் வருவாய்ஈட்டுவோருக்கு 30 சதவிகித வரி என்று விதிக்கப்பட்டுள்ளது.நிர்மலா சீதாராமனின் அறிவிப்பு, மேலோட்டமாக பார்த்தால், வருமான வரம்பு குறைப்பு மூலம் ஏதோ வரிக் குறைப்பு செய்யப்பட்டிருப்பது போல தோற்றம் தரும்.ஆனால், இந்த புதிய வரி விகிதத்தை ஏற்றுக் கொள்பவர்களுக்கு, 80 சி மற்றும்80 டி பிரிவுகளின் கீழ் பி.எப்., ஐந்து வருடநிரந்தர வைப்புத்தொகை, தேசிய சேமிப்பு பத்திரம், கிஷன் விகாஸ் பத்திரம், செல்வமகள் சேமிப்பு திட்டம், என்பிஎஸ், லைப் இன்சூரன்ஸ், ஹெல்த்இன்சூரன்ஸ், மாற்றுத் திறனாளிகளுக் கான வரிச்சலுகைகள், வீட்டு கடன் மற்றும் வீட்டுக் கடன் வட்டி உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்ட இனங்களில் இதுவரை வழங்கப்பட்டு வரும் வரிக்கழிவு, புதிய திட்டத்தில் கிடைக்காது என்ற மிகப்பெரிய ஆபத்து சாமர்த்தியமாக பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது.

உதாரணமாக ஒருவர் ஆண்டிற்கு ரூ.15 லட்சம் வருமானம் ஈட்டுகிறார் என்றால், அதில், வாடகைப்படி ரூ. 3 லட்சம்,வருங்கால வைப்பு நிதி, பல்வேறு சேமிப்பு, குழந்தைகளின் கல்விச் செலவு போன்றவற்றுக்கு 1.5 லட்சம், வழக்கமான தள்ளுபடி ரூ. 50 ஆயிரம் ஆகிய செலவுகளை கழித்துக் கொண்டு,ரூ. 10 லட்சத்திற்கு (ரூ. 1.17 லட்சம்) வரிசெலுத்தினால் போதுமானது. ஆனால் மோடி அரசு அறிமுகப்படுத்தி யுள்ள புதிய திட்டத்தில் ரூ. 15 லட்சத்திற்கும் முழுமையாக வரி செலுத்த வேண்டும். எந்தவித தள்ளுபடியும் கிடையாது. அப்படியாவது வரி குறையுமா, என்றுபார்த்தால் ரூ. 15 லட்சத்திற்கு தற்போதுஇருக்கும் ரூ. 1 லட்சத்து 17 ஆயிரம் செலுத்த வேண்டும் என்றால், புதிய திட்டத்தில் கூடுதலாக 78 ஆயிரம் ரூபாய் (ரூ. 1.95 லட்சம்) வரி செலுத்த வேண்டும் என்று கூறப்படுகிறது. ஏனைய வருவாய் வரம்புகளுக்கும் இதேபோல கூடுதல் வரி செலுத்த வேண்டும்; அல்லது வரிச் சலுகைகளை இழக்க வேண்டும்.எந்த திட்டத்தை தேர்ந்தெடுப்பது, என்பது வரி செலுத்துவோரின் விருப்பமாக தற்போது கூறப்பட்டிருந்தாலும், ஓரிரு ஆண்டுகளில் பழைய திட்டத்தை முற்றிலுமாக ஒழிப்பதற்கான முன் னோட்டமாகவே, புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி இருப்பதாக பலரும் குற்றம் சாட்டுகின்றனர்.ஆனால், இதனையெல்லாம் மறைத்துத்தான், பட்ஜெட்டில் வருமான வரி குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர்களும், பாஜகவினரும் மக் களை ஏமாற்றி வருகின்றனர்.