நலிவடைந்த பொதுத்துறை நிறுவனங்களான பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்களின் சொத்துகளை விற்கும் நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கிஉள்ளது.

பிஎஸ்என்எல் நிறுவனத்துக்குச் சொந்தமான 11 சொத்துகளும், எம்டிஎன்எல் நிறுவனத்துக்குச் சொந்தமான 6 சொத்துகளும் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.26 ஆயிரம் கோடி கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டு தொலைத் தொடர்பு நிறுவனங்களிலும் விஆர்எஸ் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன் மூலம் ஒரு லட்சம் பணியாளர்கள் விருப்ப ஓய்வூதிய திட்டத்தை தேர்வு செய்தனர்.

குறைந்த பணியாளர்கள் மூலம் இவ்விரு நிறுவனங்களையும் திறம்பட நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் இவ்விரு நிறுவனங்களுக்கும் சொந்தமான பயன்படுத்தப்படாத நிலம் மற்றும்கட்டிடங்களை விற்பனை செய்யவும் முடிவு செய்யப்பட்டது.

இது தொடர்பாக பொருளாதார விவாகரங்களுக்கான அமைச்சரவை செயலகம் கூடி இவற்றை விற்பதற்கான ஒப்புதலை வழங்கிஉள்ளது. இந்தக் குழுவில் 11 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இவ்விரு நிறுவனங்களின் தொலைத் தொடர்பு ஆலைகள் மற்றும் மருத்துவமனைகளும் விற்பனைக்கு அனுமதிக்கப்பட்ட பட்டியலில் உள்ளன.

கடந்த ஆண்டு அக்டோபரில் பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்களை ஒன்றிணைப்பது மற்றும் சீரமைப்பு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மொத்தம் ரூ.69 ஆயிரம் கோடி இதற்காக ஒதுக்கப்பட்டது. இதில் ரூ.20,140 கோடி மூலதனமாக அதாவது 4-ஜி அலைக்கற்றை தொழில்நுட்பத்தை பெறுவதற்காகவும், ரூ.3,674 கோடி ஜிஎஸ்டி செலுத்தவும், ரூ.15 ஆயிரம் கோடி கடன் பத்திரம் மூலம் திரட்டவும், ரூ.17,160 கோடி ஓய்வூதிய திட்டத்துக்காகவும், ரூ.12,768 கோடி ஓய்வூதிய பொறுப்புகளை நிறைவேற்றவும் ஒதுக்கப்பட்டது.

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 92 ஆயிரம் பணியாளர்கள் விஆர்எஸ் திட்டத்தை தேர்வு செய்துள்ளனர்.

இரண்டு நிறுவனங்களுக்கும் சேர்த்து மொத்தம் ரூ.40 ஆயிரம் கோடி கடன் சுமை உள்ளது.

BSNL Employees Union Nagercoil