BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் P.அபிமன்யு அவர்களும், தலைவர் தோழர் அனிமேஷ் மித்ரா அவர்களும் 12.02.2020 அன்று திரு அர்விந்த் வட்னேகர் DIRECTOR(HR) அவர்களை சந்தித்து, கீழ்கண்ட பிரச்சனைகளை விவாதித்தனர்:-
1) 26.05.2019 அன்று நடைபெற்ற JTO LICE தேர்வில் பல சரியான பதில்கள் உள்ள கேள்விகளுக்கு முழு மதிப்பெண்கள் வழங்க வேண்டும்:- நிர்வாகத்துடன் முன்னர் நடைபெற்ற சந்திப்பின் போது, 26.05.2019 அன்று நடைபெற்ற JTO LICE தேர்வில் கேட்கப்பட்ட, பல சரியான பதில்கள் உள்ள கேள்விகளுக்கு முழு மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்ற BSNL ஊழியர் சங்கத்தின் கோரிக்கையை பரிசீலிப்பதாக DIRECTOR(HR) ஏற்றுக் கொண்டார். ஆனால் அந்த பிரச்சனையில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை. அந்த பிரச்சனை மீண்டும் எழுப்பப்பட்ட போது, அதற்கு தேவையான நடவடிக்கைகள் வேகப்படுத்தப்படும் என DIRECTOR(HR) தெரிவித்தார்.
2) பஞ்சாப் மாநிலத்தில் JTO LICE தேர்வு முடிவுகள் வெளிவராதது:- முந்தைய சந்திப்பின் போது, சண்டிகார் மத்திய தீர்ப்பாயத்தின் தீர்ப்பின் காரணமாக உருவாகியுள்ள முட்டுக்கட்டையிலிருந்து வெளியே வர, தேவையான சட்ட வாய்ப்புகள் பரிசீலிக்கப்படும் என DIRECTOR(HR) கூறியிருந்தார். அதில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாத காரணத்தால், மீண்டும் எழுப்பப்பட்டது. தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அவர் உறுதி அளித்தார்.
3) JE LICE தேர்வு:- 2019 ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டிருந்த JE LICE தேர்வு தள்ளி வைக்கப்பட்டது. அந்த தேர்வை OFF LINE மூலம் காலதாமதமின்றி நடத்த வேண்டும் என BSNL ஊழியர் சங்கம் ஏற்கனவே கேட்டிருந்தது. அந்த பிரச்சனை மீண்டும் DIRECTOR(HR) இடம் விவாதித்த போது, அதற்கு தேவையானவற்றை செய்ய உறுதி அளித்தார்.
4) தேசிய கவுன்சிலை மீண்டும் அமைப்பது:- எட்டாவது உறுப்பினர் சரிபார்ப்பிற்கு பின் தேசிய கவுன்சில் அமைக்கப்படாதது சுட்டிக்காட்டப்பட்டது. தேசிய கவுன்சிலை விரைவில் அமைப்பதற்கும், மேலும் கால தாமதமின்றி தேசிய கவுன்சில் கூட்டம் கூட்டுவதையும், உறுதி செய்ய வேண்டும் என DIRECTOR(HR)இடம் வலியுறுத்தப்பட்டது. தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும் என DIRECTOR(HR) உறுதி அளித்தார்.

BSNL Employees Union Nagercoil