அன்பார்ந்த தோழர்களே,
      நமது நீதிமன்ற வழக்கின் அடிப்படையில், ஒப்பந்த ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள ஊதியத்தில் 30% த்தை 20.02.2020க்குள் வழங்க வேண்டும்.  இது தொடர்பாக இன்று மாநில அலுவலகத்தில் விவாதித்த போது, இதற்கான சுமார் 24 கோடி ரூபாய்களுக்கு Authorisation வந்து விட்டதாகவும், இதனை மாவட்டங்களுக்கிடையே பிரிப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது.  நிதி வந்தவுடன் ஒப்பந்தக்காரர்களுக்கு அனுப்பப்படும் என நிர்வாகம் உறுதி அளித்துள்ளது.  ஒப்பந்த ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள ஊதியத்தில் குறைந்த பட்சம் 30% கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும், இல்லையெனில் நீதிமன்ற அவமதிப்பிற்கு உள்ளாக வேண்டி இருக்கும் என நிர்வாகத்திடம் சுட்டிக் காட்டியுள்ளோம்.  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சட்ட போராட்டத்தின் முதல் வெற்றி இது.  முழு வெற்றி பெறும் வரை நமது போராட்டம் தொடரும்.
வாழ்த்துக்களுடன்,
A.பாபு ராதாகிருஷ்ணன்
மாநில செயலாளர்

BSNL Employees Union Nagercoil