காவிரி டெல்டா மண்ட லத்தை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டல மாக மாற்றும் மசோதா வியா ழனன்று(பிப்.20) சட்டப் பேரவையில் நிறைவேறியது. காவிரி டெல்டா மண்ட லத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றுவதற்கான மசோ தாவை சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய் தார். அதன் மீது நடந்த விவா தத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், இம்மசோதாவை தேர்வுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர், திருச்சி, கரூர் போன்ற மாவட் டங்கள் அதிகம் தொழிற் சாலைகள் உள்ள பகுதிகள் என்பதோடு, அவை பாதிப் பில்லாத மாவட்டங்கள் என்ற  காரணத்தால் இணைக்க வில்லை என தெரிவித்தார்.  மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்ப அரசு மறுத்துவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக,  காங்கிரஸ் கட்சி உறுப்பின ர்கள் வெளிநடப்புசெய்தனர். இதைத் தொடர்ந்து இம் மசோதா எதிர்க் கட்சிகள் உறுப்பினர்கள் இல்லாமலே சட்டப்பேரவையில் நிறை வேற்றப்பட்டது.  தொடர்ந்து பேசிய முதலமைச்சர், மசோதாவை ஒருமனதாக நிறைவேற்றமுடியாமல் போனது வருத்தத்திற்குரி யது என்றார்.

இயற்கையை பாது காப்போம்!!

இயற்கை அனனையை வாழவைப்போம்!!!

BSNL Employees Union Nagercoil