ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஊதிய நிலுவை கடுமையாக இருந்த நிலையில் BSNL ஊழியர் சங்கத்தின் ஆலோசனையின் அடிப்படையில் நமது TNTCWU நீதிமன்றத்தை நாடியது. அதில் பிரபல வழக்கறிஞர் திரு NGR பிரசாத் அவர்கள் நமக்காக வாதாடினார். அதில் இடைக்காலமாக நிலுவையில் உள்ள 30% ஊதியத்தை 20.02.2020க்குள் வழங்க வேண்டும் என உத்தரவிடப் பட்டிருந்தது. அதன் அடிப்படையில் 20.02.2020 அன்று சுமார் 25 கோடி ரூபாய் நிதி தமிழகத்திற்கு வந்து, அது ஒப்பந்த தாரர்களுக்கும் அனுப்பப்பட்டு விட்டது. இது நமது போராட்டங்களுக்கு கிடைத்திட்ட மாபெரும் வெற்றி. முழு வெற்றி கிடைக்கும் வரை நமது போராட்டம் தொடரும். நமக்காக வாதிட்ட வழக்கறிஞர் திரு NGR பிரசாத் அவர்களுக்கும், போராடிய தோழர்களுக்கும் தமிழ் மாநில சங்கத்திற்கும் நமது வாழ்த்துக்கள்.

BSNL Employees Union Nagercoil