22.02.2020 அன்று AUAB கூட்டம் புதுடெல்லியில் நடைபெற்றது. BSNLன் புத்தாக்கம் மற்றும் ஊழியர்களின் கோரிக்கைகளை தீர்வு காணக் கோரி AUAB ஏற்கனவே கொடுத்திருந்த போராட்ட அறிவிப்பிற்கு பின்னர் நடைபெற்ற நிகழ்வுகளை அந்தக் கூட்டம் பரிசீலித்தது. ஊழியர்களின் மாதாந்திர ஊதியம் மற்றும் ஊழியர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட GPF, வங்கி தவணைகள், சொசைட்டி பிடித்தம், LIC தவணை, சங்கங்களின் சந்தா உள்ளிட்டவற்றை, அந்தந்த அமைப்புகளுக்கு செலுத்துவது என்கிற குறைந்தபட்ச தேவைகளை கூட தீர்வு காண நிர்வாகம் தயாரில்லை என்பதை இந்தக்கூட்டம் கணக்கில் கொண்டது. 23.10.2019 அன்று மத்திய அமைச்சரவை ஒத்துக் கொண்ட புத்தாக்க திட்டத்தில், VRS திட்டத்தின் கீழ் சுமார் 80,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியதை தவிர 4G சேவை வழங்குவது உள்ளிட்ட மற்றவற்றை செய்வதற்கு BSNL நிர்வாகம் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லையும் இந்த கூட்டம் கவலையுடன் பரிசீலித்தது.

எனவே, விரிவான விவாதத்திற்கு பின், 24.02.2020 உண்ணாவிரதத்தை சக்தியாக நடத்துவது என AUAB முடிவெடுத்துள்ளது.

சக்தியாக நடத்திடுவோம்! கோரிக்கைகளை வென்றிடுவோம்.

செய்தி மற்றும் புகைப்படங்களை மாநில சங்கத்திற்கு தவறாமல் அனுப்பி வைக்க வேண்டும் என தமிழ் மாநில சங்கம் கேட்டுக் கொள்கிறது.

BSNL Employees Union Nagercoil