மத்திய அரசு, பிஎஸ்என்எல் நிறு வனத்தைப் புத்துயிரூட்டும் திட்டத் தினை உடனடியாக அமல்படுத்தக் கோரியும், ஊழியர்களின் குறைகளைத் தீர்க்கக் கோரியும் வலியுறுத்தி, இன்று (பிப்.24) நாடு முழுதும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளார்கள். இதுதொடர்பாக பிஎஸ்என்எல் அனைத்து யூனியன்கள் மற்றும் சங்கங்கள் சார்பில் அதன் கன்வீனர் பி.அபிமன்யு, தலைவர் சந்தேஷ்வர் சிங்  ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2019 அக்டோபர் 23 அன்று, மத்திய அமைச்சரவை பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்களுக்குப் புத்துயிர் அளிப்பதற்காக 69 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் ஒன்றிற்கு ஒப்புதல் அளித்தது. இத்திட்ட த்தின் கீழான முக்கிய அம்சங்களில் சில, பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறு வனங்களுக்கு 4ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை ஒதுக்கீடு செய்தல், பிஎஸ்என்எல் நிறுவனம் 8500 கோடி ரூபாயும், எம்டிஎன்எல் நிறுவனம் 6500 கோடி ரூபாயும் நிதி எழுப்பக்கூடிய விதத்தில் நீண்டகால பத்திரங்கள், சொத்துக்களை பணமாக்குதல் ஆகிய வற்றுக்கான இறையாண்மை உத்தர வாதம் அளித்தல் மற்றும் ஊழியர்கள் தாமாகவே முன்வந்து ஓய்வுபெறும் திட்டத்தை அமல்படுத்தல் ஆகியவை யாகும். இவற்றில்  ஊழியர்கள் தாமாகவே முன்வந்து ஓய்வு பெறும் திட்டம் மட்டுமே அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இதன்மூலம் பிஎஸ்என்எல் ஊழி யர்கள் 78,569 பேர் வீட்டிற்கு அனுப்பப் பட்டிருக்கின்றனர். மத்திய அரசாங்கம் மேற்படி திட்டத்தை அறிவித்து நான்கு மாதங்கள் கடந்தபின்பும் 4ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கப்பட வில்லை. அதேபோன்று,  இறை யாண்மை உத்தரவாதத்தையும் அமல்படுத்தி, பிஎஸ்என்எல் நிறுவனம் தனக்குத் தேவையான 8500 கோடி ரூபாய் நிதியை உருவாக்கிட, நீண்டகால பத்திரங்கள் அளிக்கப்படுவதற்கான வழிவகைகளையும் மத்திய அரசு செய்திடவில்லை. பிஎஸ்என்எல் நிறு வனத்தின் சொத்துக்களைப் பண மாக்கும் நடைமுறையும் நத்தை வேகத்தில் நகர்ந்துகொண்டிருக்கிறது. இவற்றின் விளைவாக வங்கிகளும், பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு கடன் கொடுக்க முகம் சுளிக்கின்றன. இக்காரணங்களால் பிஎஸ்என்எல் தன் வருவாயைப் பெருக்கிக்கொள்ள இயலாத நிலையில் இருக்கிறது. ஊழி யர்களுக்கு காலத்தே ஊதியம் வழங்கப் படுவதில்லை. ஒப்பந்த ஊழியர்களின் ஊதியம் கடந்த பத்து மாதங்களாக அளிக்கப்படவில்லை. இவற்றால் ஊழியர்களின் ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்யப்பட்டு கட்டப்பட்டுவந்த பொது சேமநல நிதி (GPF), வங்கிக் கடன்கள், சொசைட்டி கடன்கள், எல்ஐசி பிரிமியத் தொகைகள் பிஎஸ்என்எல் நிர்வாகத்தால் காலத்தே கட்டப்படவில்லை. இவற்றால் ஊழி யர்கள் பொது சேம நல நிதியிலிருந்தும், சொசைட்டிகளிலிருந்தும்  கடன் பெற முடியாத நிலையில் தவிக்கின்றனர். இத்தகைய சூழ்நிலையில், மத்திய தொலைத்தொடர்புத் துறையும், பிஎஸ்என்எல் நிர்வாகமும் பிஎஸ்என்எல் நிறுவனத்தையும், அதன் ஊழியர் களையும் பாதுகாத்திட உரிய நட வடிக்கைகளை உடனடியாக எடுக்க வலியுறுத்தி, பிஎஸ்என்எல் அனைத்து யூனியன்கள் மற்றும் சங்கங்கள் சார்பில் பிப்ரவரி 11 அன்று ஒரு மணி நேர மதிய  உணவு இடைவேளை ஆர்ப்பாட்ட ங்கள் நாடு முழுதும் நடைபெற்றன. இதன் தொடர் நடவடிக்கையாக திங்கள்கிழமையன்று (24.2.20) நாடு முழுதும் ஊழியர்கள் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். இப் போராட்டம் பிஎஸ்என்எல் கார்ப்பரேட் அலுவலகம், சர்க்கிள்கள் மற்றும்  மாவட்ட மையங்களில் நடைபெறு கின்றன. இவ்வாறு அவர்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளார்கள்.

BSNL Employees Union Nagercoil