இன்று (24.02.2020) CMD BSNL, AUAB தலைவர்களை பேச்சு வார்த்தைக்கு அழைத்தார். AUAB சார்பாக தோழர் P.அபிமன்யு GS BSNLEU & CONVENOR AUAB, தோழர் சந்தேஸ்வர் சிங் GS NFTE &
CHAIRMAN AUAB, தோழர் K.செபாஸ்டின் GS SNEA, தோழர் S.சிவகுமார் GS AIBSNLEA, தோழர் B.C.பதக் TREASURER FNTO, தோழர் சுரேஷ் குமார் GS BSNL MS மற்றும் தோழர் H.P.சிங் GS BSNL OA ஆகியோர் கலந்துக் கொண்டனர். திரு அர்விந்த் வட்னேர்கர் DIRECTOR (HR) மற்றும் திரு A.M. குப்தா GM (SR) ஆகியோரும் உடன் இருந்தனர்.
விருப்ப ஓய்வு திட்டத்திற்கு பின் சேவைகளை பராமரிக்க நிர்வாகம் எடுத்து வரும் நடவடிக்கைகள் மற்றும் சொத்துக்களை பணமாக்குவதற்கு தொடர்பாக எடுத்து வரும் முயற்சிகள் ஆகியவற்றை திரு P.K.புர்வார் CMD BSNL விவரித்தார். 4G சேவைகளை துவக்குவது தொடர்பாக அவரால் எந்த ஒரு கால அவகாசத்தையும் தெரிவிக்க இயலவில்லை. பணியில் உள்ள ஊழியர்களின் அனைத்து பிரச்சனைகளையும் தீர்வு காண நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் உறுதி அளித்தார்.
4G சேவைகளை துவக்குவதில் உள்ள கால தாமதம் தொடர்பாக தங்களின் வருத்தத்தை, AUAB தலைவர்கள் தெரிவித்தனர். மேலும் உடனடியாக ஊதியம் வழங்க வேண்டும், ஒப்பந்த ஊழியர்களின் ஊதியம் வழங்கப்பட வேண்டும் மற்றும் ஊழியர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்டதை சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கு வழங்க வேண்டும் என தலைவர்கள் வலியுறுத்தினர். மேலும், சேவைகளை மேம்படுத்துவது தொடர்பாக AUAB மற்றும் நிர்வாகத்திற்கிடையே எந்த ஒரு தொடர்பும் இல்லையென்றும் சுட்டிக்காட்டினர். இறுதியாக அமைதியான போராட்டங்களான தர்ணா, உண்ணாவிரதம் போன்றவற்றைக் கூட சகித்துக் கொள்ளாத CMD BSNLன் மனப்பாங்கை அவர் கைவிட வேண்டும் என்றும் AUAB தலைவர்கள் கூறினர்.
AUABயின் ஒவ்வொரு கவலைகளையும் கணக்கில் எடுக்கப்படும் என CMD BSNL உறுதி அளித்தார்.

BSNL Employees Union Nagercoil