ஜியோ உள்ளிட்ட தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தற்போது 4ஜி சேவையை வழங்கி வரும் நிலையில், 5ஜி சேவையை செயல்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றன.

ஆனால் நமது  பி.எஸ்.என்.எல். நிறுவனமோ இன்னும் 3ஜி நெட்வொர்க்கிலிருந்து மாறவேவில்லை. தொழில்நுட்பத்தில் பின்தங்கி இருப்பது, கடுமையான நிதி நிர்வாகத்தில் கடுமையான நெருக்கடி போன்ற காரணங்களால் பி.எஸ்.என்.எல்.  மோசமான நிலையில் இருந்து வருகிறது.\

இந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதத்தில் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் வழங்கிய மொபைல் இணைப்புகள் குறித்த புள்ளிவிவரத்தை தொலைத்தொடர்பு துறை ஒழுங்குமுறை ஆணையமான டிராய் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிட்டது. அதில், 2019 டிசம்பர் மாதத்தில் பி.எஸ்.என்.எல். மற்றும் ஜியோ ஆகிய இரு நிறுவனங்கள் மட்டுமே புதிதாக வாடிக்கையாளர்களை அதிகம் பெற்றுள்ளன.

குறிப்பாக பி.எஸ்.என்.எல். நிறுவனம் புதிதாக 4.26 லட்சம் மொபைல் இணைப்புகளை வழங்கியுள்ளது. ஆனால் ஜியோ நிறுவனம் வெறும் 82,308 மொபைல் இணைப்புகளை மட்டுமே வழங்கியுள்ளது. அதேபோல வோடாபோன் ஐடியா மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் முறையே 36 லட்சம் மற்றும் 11,050 வாடிக்கையாளர்களை இழந்துள்ளன.

மிகக்குறுகிய காலத்தில் தொலைத்தொடர்பு துறையில் அசுர வளர்ச்சி கண்ட ஜியோ நிறுவனத்துக்கு பி.எஸ்.என்.எல். நிறுவனம் சிறந்த போட்டியாளராக உருவாகியுள்ளதை கடந்த டிசம்பர் மாத மொபைல் இணைப்பு புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. தற்போது பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் புத்துயிர் நடவடிக்கைகளை மத்திய அரசு விரைவுப்படுத்தினால் எதிர்காலத்தில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் மீண்டும் தொலைத்தொடர்பு துறையில் மீண்டும் கொடி கட்டி பறக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

அதே நேரத்தில் 2019 டிசம்பர் மாதத்தில் புதிதாக 4.26 லட்சம் மொபைல் இணைப்புகளை வழங்கி சாதனைப் படைத்ததால் 4G அலைக்கற்றை கிடைக்குமா? என்ற சந்தேகம் நம்மிடம் வந்துள்ளது.பி.எஸ்.என்.எல். வளர்ச்சியை இந்த அரசு விரும்புகிறதா?.அப்படி விரும்பிகிறது என்றால்      VRS 19 திட்டம் எதற்கு கொண்டுவந்தது. எதுவாக இருந்தாலும் நாம் மக்களிடம் செல்வோம். மக்கள் பி.எஸ்.என்.எல்.lஐ நேசிக்கிறார்கள்

 

BSNL Employees Union Nagercoil