BSNL CCWFன் பொதுச்செயலாளர் தோழர் அனிமேஷ் மித்ரா மற்றும் BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் P.அபிமன்யு ஆகியோர், திரு P.K. புர்வார் BSNL அவர்களை இன்று (03.03.2020) சந்தித்து, ஒப்பந்த ஊழியர்களின் பிரச்சனைகளைக் கொண்ட மனுவை வழங்கினர்.
ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதியத்தை விரைவில் வழங்குவதற்கான நிதியினை ஒதுக்க வேண்டும் என, இரண்டு தலைவர்களும் BSNL CMDயிடம் வலியுறுத்தினர். மேலும், ஒப்பந்த ஊழியர்களின் ஆட்குறைப்பு தொடர்பாக மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர். அத்துடன், புதிய JOB CONTRACT முறைக்கு மாறுவதற்கு பதிலாக தற்போதுள்ள முறையே தொடர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.
இந்த பிரச்சனைகளில் தலையிடுவதாக BSNL CMD பதிலளித்துள்ளார்.

BSNL Employees Union Nagercoil