06.03.2020 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் மாநில நிர்வாகத்தின் சார்பில் (AFFIDAVIT) திரு ராஜ்குமார் (DGM Admin) அவர்கள் சமர்ப்பித்த பிரமண பத்திரத்தின் (AFFIDAVIT) சாரம்சம் :

1.  BSNL நிறுவனம் நிதி நெருக்கடியில் இருந்த போதிலும் சென்னை உயர் நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பு கேற்ப முழு முயற்சி செய்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சம்பளத்திற்காக  ஒப்பந்ததாரர்களுக்கு நிலுவையிலுள்ள 30 % பில்களுக்கு தொகை வழங்கப்பட்டுவிட்டது. ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கிய தொகை விவரம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

2. தொலைத்தொடர்பு சந்தையில் ஏற்பட்ட பின்னடைவு, குறைவான தொலைதொடர்பு கட்டணம் ஆகிய காரணங்களால் BSNL நிறுவனம் கடுமையான நிதி நெருக்கடியில் இருப்பதால் மீதமுள்ள 70 % சம்பள நிலுவையை வழங்குவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் 6 மாத கால அவகாசம் அளிக்க வேண்டும்.

இதற்கான பதில் மனுவை நமது வழக்கறிஞர் அடுத்த விசாரணை நடைபெறும்போது நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பார். அடுத்த விசாரணை 20.03.2020 அன்று நடைபெறும்..

BSNL Employees Union Nagercoil