அரசின் BSNL விரோத கொள்கைகளுக்கு எதிராக, BSNLEU அனைத்து சங்கங்களையும் ஒருங்கிணைத்து தொடர்ந்து போராடி வருகிறது. நமது ஒன்றுபட்ட போராட்டங்களின் காரணமாகவே இன்றுவரை BSNL பாதுகாக்கப்பட்டுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. இருப்பினும், அரசின் தாக்குதல்களின் காரணமாக BSNL கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. சம்பளம், GPF லோன் ஆகியன கிடைக்காமல் ஊழியர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இந்த நிலையில் ஊழியர்களின் அதிருப்தியை BSNLEU வுக்கெதிராக திருப்பிவிடும் ஒரு திட்டமிட்ட சதிவேலை நடந்து வருகிறது. மார்ச், 2019 ல், WFTU மாநாட்டில் கலந்துகொள்ள நமது பொதுச் செயலர் தோழர் அபிமன்யு இஸ்தான்புல் சென்றார்.  *”ஊழியர்கள் சம்பளமின்றி தவிக்கும் போது BSNLEU பொதுச் செயலர் வெளிநாட்டில் உல்லாசப் பயணம்”* என்று  போஸ்டர் போட்டு நாடு முழுவதும் வாட்ஸ்அப்பில் அனுப்பப்பட்டது. இந்த போஸ்டரை தயாரித்தது மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு NFTE தோழர். NFTE பொதுச்செயலரிடம் நமது பொதுச் செயலர் புகார் செய்தார். ஒரு நடவடிக்கையும் இல்லை.
இதே போல் 8வது உறுப்பினர் சரிபார்ப்பின்போது வாட்ஸ்அப் மூலமாக BSNLEUவுக்கெதிராக கடும் அவதூறு பிரச்சாரம் கட்டவிழ்த்து விடப்பட்டது. கம்பெனி நஷ்டத்தில் போனதற்கும் ஊழியர்களுக்கு சம்பளம் கிடைக்காமல் போனதற்கும் BSNLEUவே காரணம் என  திட்டமிட்ட அவதூறு பிரச்சாரம் கட்டவிழ்த்து விடப்பட்டது. BSNLEU இப்படிப்பட்ட கேவலமான பிரச்சாரத்தை எந்த மாநிலத்திலும் செய்யவில்லை என நம்மால் சவால் விட்டுச் சொல்ல முடியும். தேர்தல் முடிந்தவுடன், நமது பொதுச் செயலர், வாட்ஸ்அப்பில் வந்த மெஸ்ஸேஜ்களை இணைத்து NFTE பொதுச் செயலருக்கு புகார்  கடிதம் அளித்தார். அப்புகாரின் நகல் AlTUC யின் பொதுச்செயலருக்கும் அனுப்பப்பட்டது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஆனால், BSNLEUமீதும் பொதுச் செயலர் அபிமன்யு மீதும் சேற்றை வாரி இறைக்கும் வேலை திட்டமிட்டு தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது. இப்படித்தான் சமீபத்தில் பொதுச்செயலருக்கு எதிராக வாட்ஸ் அப்பில்  ஆடியோ கிளிப்புகள் வைரல் செய்யப்பட்டன. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், வட இந்தியாவில் இந்தியில் வரும் இது போன்ற வாட்ஸ்அப் மெஸ்ஸேஜ்கள், உடனனுக்குடன் பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு, அங்குள்ள மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வைரல் செய்யப்படுவதற்கு தேவையான ஏற்பாடுகள் உள்ளன.
இந்த பிரச்சாரங்கள் எல்லாம் BSNLEU வை பலவீனப்படுத்தும் நோக்கிலேயே செய்யப்படுகின்றன என்பதை மறக்கக் கூடாது. எனவே, இதை தொடர்ந்து அனுமதிக்க முடியாது. *விமர்சனங்கள் செய்யலாம். கருத்தோடு கருத்து மோதலாம். ஆனால் தொடர்ந்து முகத்தில்  உமிழ்ந்துவிட்டு ஓடி விடுவதை அனுமதிக்க முடியாது.* எதைக் காட்டியும் இந்த இழி செயலை நியாயப்படுத்தவே முடியாது. “நான் ஃபார்வர்ட் மட்டும்தானே செய்தேன்” என்றும் யாரும் தப்பித்துக் கொள்ளவும் முடியாது. பிரச்சினையே, விஷம்தோய்ந்த மெஸ்ஸேஜ்களை ஃபார்வர்ட் செய்பவர்கள் தான்.
இதற்கு முடிவு கட்டவே நமது அனைத்திந்திய சங்கம்  நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. வழக்கு தொடுக்கப்பட்டிருப்பது எந்த தனிநபரையும் பழிவாங்கும் நோக்கில் அல்ல.  மேலும், இது நமது பொதுச் செயலர் அபிமன்யுவின் தனிப்பட்ட முடிவும் அல்ல. *பரோடாவில் நடைபெற்ற மத்திய செயற்குழுக்கூட்டத்தில், அனைத்து மாநிலச் செயலர்களும், மத்திய சங்க நிர்வாகிகளும் இந்த முடிவுக்கு முழு மனதான ஒப்புதல் வழங்கியுள்ளனர்.*
-A.பாபு ராதாகிருஷ்ணன்
மாநில செயலாளர்,
BSNL ஊழியர் சங்கம்,
தமிழ் மாநிலம்

BSNL Employees Union Nagercoil