CAA (குடியுரிமை திருத்த சட்டம்), NPR (தேசிய மக்கள் தொகை அட்டவணை) மற்றும் NRC (தேசிய குடிமக்கள் அட்டவணை) ஆகியவை இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மதசார்பற்ற தன்மைக்கு எதிராக உள்ளன.

ஒருவரது மதத்தின் அடிப்படையில், அவரது குடியுரிமை தீர்மாணிக்கப்படக்கூடாது என்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் உள்ளார்ந்த கருத்து. எனினும், குடியுரிமை திருத்த சட்டம் ஒரு குறிப்பிட்ட மதத்தை சார்ந்த புலம் பெயர்ந்தவர்களை, இந்திய குடியுரிமை பெறுவதிலிருந்து விலக்கி வைக்கிறது. தேசிய மக்கள் தொகை அட்டவணையின் அடிப்படையில், தேசிய குடிமக்கள் அட்டவணை தயாரிக்கப்படும். தேசிய மக்கள் தொகை அட்டவணை தயாரிக்கும் போது, ஒவ்வொரு நபரும், அவரது பெற்றோர் பிறந்த இடத்தையும், தேதியையும் தெரிவிக்க வேண்டும். அந்த விவரங்களை அவர் தரவில்லை என்றால், அவர் சந்தேகத்திற்குரிய குடிமகன் பட்டியலில் வைக்கப்படக்கூடும். ஒருவர் தனது குடியுரிமையை உறுதி செய்ய, அதிகாரிகளுக்கு பெரிய அளவில் லஞ்சம் தர வேண்டி இருக்கும்.

அஸ்ஸாமில் தேசிய குடிமக்கள் அட்டவணை இறுதி செய்த போது, 19 லட்சம் மக்கள் தங்கள் குடியுரிமையை இழந்துள்ளனர். குடியுரிமை பெற முடியாதவர்கள் பட்டியலில், கார்கில் யுத்தத்தில் பங்கு பெற்ற வீரர் ஒருவரும், இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களும் அடங்குவர். இவ்வாறு இருக்கையில், இந்திய நாடு முழுமைக்கும், தேசிய குடிமக்கள் அட்டவணை அமலாக்கப்பட்டால், எத்தனை கோடி மக்கள் தங்கள் குடியுரிமையினை இழப்பார்கள்?

இஸ்லாமியர்கள் மட்டுமல்ல, அரசாங்கத்தை விமர்சிப்பவர்களுக்கும், எதிர்ப்பவர்களுக்கும் கூட குடியுரிமை கிடைக்காது.

இந்த CAA, NPR மற்றும் NRC ஆகியவை மக்களை, குறிப்பாக உழைக்கும் மக்களை மத அடிப்படையில் பிளவு படுத்தும்.

விடுதலை போராட்ட வீரர்கள் பகத்சிங், சுகதேவ் மற்றும் ராஜகுரு ஆகியோரின் நினைவு தினம், 2020, மார்ச் 23 அன்று வருகிறது. வதோதராவில் நடைபெற்ற BSNL ஊழியர் சங்கத்தின் மத்திய செயற்குழு, அந்த தினத்தை “CAA, NPR மற்றும் NRC ஆகியவற்றின் எதிர்ப்பு தின”மாக கடைபிடிக்கப்பட வேண்டும் என அறைகூவல் விடுத்துள்ளது. அன்றைய தினம் கருப்பு ரிப்பனுடன் கூடிய கோரிக்கை அட்டை அணிய வேண்டும் என மத்திய செயற்குழு கேட்டுக் கொண்டுள்ளது. மதிய உணவு இடைவேளை வாயிற்கூட்டங்களை நடத்தி, அதில் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் முகவுரையை படிக்க வேண்டும். இந்த இயக்கத்தை மாவட்ட மாநில சங்கங்கள் வெற்றிகரமாக நடத்திட வேண்டும்.

BSNL Employees Union Nagercoil